மண்டல அளவில் கபடி போட்டி மாணவியருக்கு பாராட்டு விழா


ஈரோடு: ஈரோடு மண்டல அளவிலான, பெண்களுக்கான கபடி போட்டி ஒத்தக்குதிரை வெங்கடேஸ்வரா ஹைடெக் பாலிடெக்னிக் கல்லுாரியில் நடைபெற்றது.


ஆறு பாலிடெக்னிக் கல்லுாரிகள் கலந்து கொண்ட கபடி போட்டியில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹைடெக் பாலிடெக்னிக் மாணவியர் அணி முதல் இடமும், சேரன் பாலிடெக்னிக் கல்லுாரி இரண்டாம் இடமும் பெற்றன. வெற்றி பெற்ற மாணவியருக்கு கல்லுாரி நிர்வாகத்தின் சார்பாக பாராட்டு விழா முதல்வர் பிரகதீஸ்வரன் தலை-மையில் நடந்தது. கல்லுாரி செயலாளரும், பவானி சட்டசபை தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வுமான கருப்பணன் சிறப்பாளராக கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசு கோப்பை வழங்கினார்.


கல்லுாரி முதன்மை செயல் அதிகாரி கவுதம் கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார். விழாவில் பிசி-யோதெரபி கல்லுாரி முதல்வர் நந்தகுமார், கல்-லுாரி துணை முதல்வர் மணி, அனைத்து துறைத் தலைவர்கள், இருபால் ஆசிரியர்கள், மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடு-களை உடற்கல்வி இயக்குனர் பிரபாகரன் செய்-திருந்தார்.

Advertisement