தொழிலாளர் துறை சோதனை: 45 நிறுவனம் மீது நடவடிக்கை

ஈரோடு: ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அம-லாக்கம்) ஜெயலட்சுமி தலைமையில், துணை, உதவி ஆய்வர்கள் கடந்த டிசம்பரில் மாவட்-டத்தின் பல பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ், பழைய இரும்பு பொருட்கள், உலோகங்கள் வாங்கப்படும் கடைகள், பழைய பேப்பர் கடைகள், இனிப்பு, பேக்-கரிகளில் எடை அளவு மாறுபாடு குறித்து, 104 கடைகளில் ஆய்வு செய்ததில், 37 கடைகளில் முரண்பாடுகள் அறியப்பட்டது.


பொட்டல பொருட்கள் விதிப்படி, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள், இனிப்பு கடைகள், பேக்கரி, இ-காமர்ஸ் வணிக நிறுவனங்களில் அதிகபட்ச சில்லரை விற்பனை விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்தல், விதி மீறல் தொடர்பாக, 33 கடைகளில் நடந்த ஆய்வில், 5 இடங்களில் முரண்பாடு அறியப்பட்டது.


குருவரெட்டியூர், கோபி, வீரப்பன்சத்திரம், கலிங்கயம் உட்பட பல பகுதியில் சந்தை, தினசரி மார்க்கெட்டில் தரமற்ற அளவை, மறு முத்திரை-யிடாமல் பயன்படுத்திய எடையளவு, மின்னணு தராசு என, 34 எடையளவுகள் பறிமுதல் செய்யப்-பட்டன. குறைந்தபட்ச ஊதியம் குறித்து, 17 கடைகள், நிறுவனங்களில் நடந்த ஆய்வில், 3 இடங்களில் ஊதிய குறைபாடு அறியப்பட்டு, நீதி-மன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகி-றது.


பொதுமக்கள், 1098, 155214 என்ற எண்களில் தொழிலாளர் துறைக்கு புகார்களை தெரிவிக்-கலாம், என உதவி ஆணையர் கேட்டு கொண்டார்.

Advertisement