கைவினை திட்டத்தின் கீழ் 236 பேருக்கு 3.36 கோடி ரூபாய் வழங்கல்: கலெக்டர்


கரூர்: ''கரூர் மாவட்டத்தில், கலைஞர் கைவினை திட்-டத்தின் கீழ், 236 பேருக்கு, 3.36 கோடி ரூபாய் கட-னுதவி வழங்கப்பட்டுள்ளது,'' என, கலெக்டர் தங்-கவேல் கூறினார்.



கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கலைஞர் கைவினை திட்டத்தின் கீழ் நேற்று, ஐந்து பேருக்கு, 10.78 லட்ச ரூபாய் கடனுதவி வழங்கி கலெக்டர் தங்கவேல் கூறியதாவது:
தமிழகத்தில் கலைஞர் கைவினை திட்டம், வாழ்-வாதாரத்தை பெருக்கவும், கலைத்திறனை ஊக்-குவிக்கவும் கொண்டு வரப்பட்ட திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது, அரசின் அங்கீகார அட்டை வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் கடந்த ஓராண்டில், 236
பேருக்கு, 3.36 கோடி ரூபாய் மதிப்பில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. திட்டம் குறித்த கூடுதல் விபரங்களை பெற, மாவட்ட தொழில் மையத்தை அணுக வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


அரவக்குறிச்சி தி.மு.க., எம்.எல்.ஏ., இளங்கோ, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வசந்த-குமார், ஜவுளி ஏற்றுமதி உற்பத்தியாளர் சங்க தலைவர் அன்பொழி காளியப்பன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement