பள்ளியில் விளையாட்டு விழா 

மந்தாரக்குப்பம்: நெய்வேலி வடக்குத்து ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.

கல்விக்குழும தலைவர் ஜெயசங்கர் தலைமை தாங்கினார். பள்ளி இயக்குநர் தினேஷ் முன்னிலை வகித்தார். பள்ளி செயலாளர் சிந்து வரவேற்றார்.

பள்ளி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட பின், வெண் புறாக்களை பறக்க விட்டு, ஒலிம்பிக் சுடர் ஏற்றி வைத்து விளையாட்டுப்போட்டிகள் துவங்கின.

மாணவர்கள் பல்வேறு சாகசங்கள் செய்து தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் சிதம்பரி மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Advertisement