நலன் காக்கும் ஸ்டாலின் கூட்டம் 1,417 பேருக்கு சிகிச்சை
திருத்தணி: புச்சிரெட்டிப்பள்ளியில் நடந்த நலன் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமில், 1,417 பேருக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டன.
திருத்தணி ஒன்றியம் புச்சிரெட்டிப்பள்ளி கிராமத்தில், மாவட்ட சுகாதார துறையின் சார்பில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் நேற்று நடந்தது. இதில், உதவி திட்ட மேலாளர் மருத்துவர் ராஜேஷ்குமார், பீரகுப்பம் வட்டார மருத்துவ அலுவலர் கலைவாணி ஆகியோர் பங்கேற்று முகாமை துவக்கி வைத்தனர்.
முகாமில், கண், காது, எலும்பு, இதயம் உட்பட பல்வேறு நோய்களுக்கு இலவச பரிசோதனைகள், ஆலோசனைகள் மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுதவிர, ரத்த அழுத்தம், சி.டி.ஸ்கேன், கர்ப்பிணியருக்கு பரிசோதனை மற்றும் தடுப்பூசிகள் போடப்பட்டன.
இதில், திருத்தணி ஒன்றியத்தில் இருந்து, 1,417 பேர் பங்கேற்றனர். இவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினர். தொடர்ந்து, ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் கண் கண்ணாடி வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முரளி, செவிலியர் உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
'ஜாதி, மத பேதமின்றி மக்கள் சேவை செய்தவர் குருநானக்'
-
67 லட்சம் பேர் வேலைக்காக பதிவு : காலியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
-
பழநியில் 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
-
பள்ளி சாரா, வயது வந்தோர் கல்வி திட்டம்: சிறந்த சி.இ.ஓ.,க்களுக்கு விருது
-
வங்கியில் போலி நகை அடகு வைத்து ரூ.17 லட்சம் மோசடி: மதிப்பீட்டாளர் உட்பட மூவர் கைது
-
காஷ்மீர் எல்லையில் மீண்டும் தென்பட்டது பாக் ட்ரோன்கள்; சுட்டு வீழ்த்தியது இந்திய ராணுவம்