தச்சக்காடு கிராமத்தில் கோ பூஜை

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அடுத்த தச்சக்காடு கிராமத்தில், மேல்மருத்துார் ஆதிபராசக்தி வார வழிப்பாட்டு மன்றம் சார்பில், கோ பூஜை நடந்தது.

மண்டல தணிக்கையாளர் ஜவகர் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர், முன்னாள் கூடுதல் செயலாளர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். அண்ணாமலை பல்கலை பேராசிரியர் பாலகுமார் வரவேற்றார்.

கோ பூஜையை, அண்ணாமலை பல்கலை பேராசிரியர் ஞானகுமார், துவக்கி வைத்தார். பூஜைகளை, பூமாதேவி செய்தார். இதில், சாந்தி ராமலிங்கம், சங்கர், நளமகாராஜன், கார்த்திக்ராஜா, உதயசூரியன், சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement