சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து போராட்டம்

சேலம்: தமிழ்நாடு சத்துணவு பணியாளர் மற்றும் அங்கன்வாடி ஊழியர் சங்க கூட்டமைப்பு சார்பில், ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்து, சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



தேர்தல் வாக்குறுதிப்படி சிறப்பு காலமுறை ஊதியம் வழங்குதல்; சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்களுக்கு, 19,500 ரூபாய், சமையல் உதவியாளர்களுக்கு, 15,700 ரூபாய் அடிப்படை ஊதியம் வழங்குதல்; அரசு ஊழியர்களாக அறிவித்தல் உள்பட, 10 கோரிக்கைகளை வலியுறுத்தினர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராமச்சந்திரன், சரோஜா, மகேஷ்வரி, தமிழ்நாடு சத்துணவு - அங்கன்வாடி ஓய்வூதியர், சத்துணவு ஊழியர்கள், தமிழ்நாடு ஐ.சி.டி.எஸ்., ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள், தமிழ் மாநில அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆகிய சங்கங்களில் இருந்து ஊழியர்கள் பங்கேற்றனர்.

Advertisement