ஏப்ரல் 1ல் முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடக்கம்
புதுடில்லி: ஏப்ரல் 1ம் தேதி முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஏப்ரல் 1ம் தேதி தொடங்குவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அரசின் நலத்திட்ட உதவிகள், பொது மக்களுக்கு முறையாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை, நாடு முழுதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடக்கும். அந்த வகையில், 2011ல், நாடு தழுவிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பின், 2021ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.
ஆனால், கொரோனா பரவல் காரணமாக அந்தப் பணி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நாடு முழுதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, 2027ல் இருகட்டங்களாக நடக்கும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது. இது குறித்து நேற்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
''2027ம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் வீட்டுப்படியல் நடவடிக்கைகள் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், அந்தந்த மாநிலமும் யூனியன் பிரதேசமும் குறிப்பிடும் 30 நாட்களுக்குள் நடைபெறும்'' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும்
-
ஜனநாயகன் படத்துக்கு தொடரும் சிக்கல்; தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து சென்சார் போர்டு மேல் முறையீடு
-
கிரீன்லாந்தை கைப்பற்ற திட்டமா? அதிபர் டிரம்புக்கு டென்மார்க் கடும் எச்சரிக்கை
-
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வு
-
அதிமுக - பாஜ தொகுதி பங்கீடு பேச்சு: இபிஎஸ் உடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
-
மயிலாடுதுறை மீனவர்களுக்கு எச்சரிக்கை
-
போராடும் ஈரான் மக்களுக்கு துணை நிற்போம்: அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் உறுதி