தமிழகத்தில் 32 மாவட்டங்களில் இருந்து சாப்ட்வேர் ஏற்றுமதி: முதல்வர் ஸ்டாலின்
சென்னை: தமிழகத்தின் 38 மாவட்டங்களில், 32 மாவட்டங்களில் இருந்து மென்பொருள் ஏற்றுமதி நடக்கிறது என மத்திய அரசு வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரம் தெரிவிப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
உமாஜின் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டின் நான்காவது பதிப்பு சென்னை வர்த்தக மையத்தில் நேற்று துவங்கியது. இதில் பல்வேறு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தமிழக அரசு இடையே 8,900 கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தொழில்நுட்ப துறையில், இன்றைக்கு நாம் இந்த அளவிற்கு எல்லோருக்கும் 'அட்வான்சாக' இருக்கிறோம் என்றால், அதற்கான அடித்தளத்தை அமைத்தவர் கருணாநிதி.
பள்ளிகளிலேயே கணினி கல்வி, - டைடல் பூங்கா என்று அவர் ஏற்படுத்தி கொடுத்ததால் தான் நாம் இவ்வளவு துாரம் வந்திருக்கிறோம். தொழில்நுட்பம் ஒரு துணை செயல்பாடாக இல்லாமல், பொருளாதார சக்கரத்தின் மைய அச்சாக இப்போது மாறியிருக்கிறது. நாம் பாரம்பரியமாக வலுவாக இருக்கும் சேவை துறையில் இருந்து, உயர்நுட்பம், புத்தாக்கம் மற்றும் புதுமை மையமான பொருளாதாரதுக்கு தமிழகம் நகர்ந்து வருகிறது. அடுத்த தலைமுறை கணினிகளின் மையமாக சென்னை உருவெடுத்து வருகிறது.
தொழில்நுட்ப ஆராய்ச்சி, செயற்கை நுண்ணறிவு, பின்டெக், வாகன மென்பொருள், பொறியியல் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு மேம்பாட்டு மையங்கள் இங்கு உருவாகி வருகின்றன. எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், ஸ்பேஸ், டெக்ஸ்டைல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் ஏ.ஐ., தொழில்நுட்பம், ஆட்டோமேஷன், டேட்டா பேஸ் மற்றும் டிஜிட்டல் வடிவமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்துள்ள மாநிலங்கள் உலகளவில் மிகவும் குறைவு.
இப்படி, உற்பத்தி திறனையும், டிஜிட்டல் புதுமையையும் ஒருங்கிணைக்கும் சூழல் இயல்பாகவே அமைந்திருப்பதுதான் தமிழகத்தின் தனிச்சிறப்பு. தமிழகத்தின் 32 மாவட்டங்களில் இருந்து மென்பொருள் ஏற்றுமதி நடக்கிறது என மத்திய அரசின் எஸ்.டி.பி.ஐ., வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. நிர்வாகம், மருத்துவம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கோடிக்கணக்கான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை வெற்றிகரமாக கையாளுவதற்கு நமது மாநிலத்தின் ஆற்றல்மிக்க மனிதவளமே முக்கிய காரணமாகும். இவ்வாறு அவர் பேசினார்.
@block_B@ஸ்டார்ட் -அப் தமிழ்நாடு மற்றும் நியோ டைடல் பார்க் போன்ற முயற்சிகள் வாயிலாக பொருளாதார வளர்ச்சி இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இருக்கிறது. கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய நகரங்களும், தமிழகத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்குதாரர்களாக உயர்ந்திருக்கின்றன.block_B
@block_G@
உமாஜின் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் நாட்டிலேயே முதலாவதாக தமிழகத்தில் 'டீப் டெக்' எனும் ஆழ்நிலை தொழில்நுட்ப புத்தொழில் நிறுவன கொள்கை வெளியிடப்பட்டது. அதன் விபரம்:
* தமிழகத்தை இந்தியாவின் 'டீப் டெக்' தலைநகராக மாற்றுவதே இந்த கொள்கையின் நோக்கம்.
* தமிழகத்தில் 2031க்குள் 100 'டீப் டெக்' தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்களை ஊக்குவிக்க இலக்கு.
* பொது, தனியார் முதலீடு வாயிலாக 100 கோடி ரூபாய் நிதி திரட்டி, ஏ.ஐ., ரோபோடிக்ஸ், விண்வெளித் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் 10,000 பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி.
* ஐ.டி., நிறுவனங்கள் ஆரம்பக்கட்ட ஆராய்ச்சி மற்றும் முன்மாதிரிகளை உருவாக்க நிதி உதவி
* அரசு சார்ந்த தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களில் வாடகை மானியம் மற்றும் மேம்பட்ட ஆய்வகங்களை அணுக வசதி.
* உலகளாவிய கண்காட்சிகளில் பங்கேற்கவும், வெளிநாட்டுச் சந்தைகளை அடையவும் பயண மானியம்.
* இதனை செயல்படுத்தும் முதன்மை முகமையாக தமிழக அரசின் ஐ.டி.என்.டி. ஹப் செயல்படும்.block_G
இரும்புக்கை கோப்பால்: "ஏன் ஆபீஸர்ஸ், அதெல்லாம் கன்டைனரில் அனுப்புவீங்களா, லாரியிலா? லாரி என்றால் நல்லா தார்ப்பாய் போட்டு மூடி, கயிறு போட்டு கட்டி அனுப்பப் சொல்லுங்கள். இல்லையென்றால் துறைமுகம் செல்லும் வழியில் கொட்டி வீணாகி விடும்". அதிகாரிகள் மனதுக்குள்: "எல்லாம் நம் தலையெழுத்து"மேலும்
-
உலகம் முழுவதும் திடீரென முடங்கியது எக்ஸ் தளம்: பயனர்கள் அதிருப்தி
-
கூடங்குளத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்!
-
சூதாட்ட இணையதள பக்கங்கள் முடக்கம்; மத்திய அரசு அதிரடி
-
எதிர்க்கட்சிகளின் பிளவுபடுத்தும் அரசியலை முறியடித்த மும்பை மக்கள்: அண்ணாமலை
-
வளர்ச்சி, தொலைநோக்குப் பார்வையின் தாக்கமே மஹா. உள்ளாட்சித் தேர்தல் வெற்றி; பிரதமர் மோடி வாழ்த்து
-
ஈரான் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கிறோம்; மத்திய அரசு