'துாய்மை பணியாளர் வாரியத்தில் 13,842 உறுப்பினர்கள் சேர்ப்பு'

சேலம்: சேலம், கோட்டை பல்நோக்கு அரங்கத்தில், துாய்மை பணியாளர்களுக்கு அடையாள அட்டை, நலத்திட்ட உதவி வழங்கும் விழா நேற்று நடந்தது. அதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், அடையாள அட்டை, நலத்திட்ட உதவி வழங்கி பேசியதாவது:


கடந்த, 2007ல், துாய்மை பணியாளர் நல வாரியம் தொடங்கப்பட்டது. அதில் அரசு, மருத்துவ, விபத்து காப்பீடு, கல்வி, இயற்கை மரண உதவித்தொகைகள் உள்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தை, இம்மாத இறுதியில், முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். சேலம் மாவட்டத்தில் இதுவரை, 13,842 பேர், துாய்மை பணியாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அவர் பேசினார்.
துாய்மை பணியாளர் நல வாரிய தலைவர் ஆறுச்சாமி, கலெக்டர் பிருந்தாதேவி, மேயர் ராமச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement