மியூச்சுவல் பண்டு கட்டணங்கள் குறைகிறது

மியூச்சுவல் பண்டு முதலீட்டாளர்களுக்கு பயன் தரும் வகையில், செபி புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இது, ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி மியூச்சுவல் பண்டுகளில் 'பேஸ் எக்ஸ்பென்ஸ் ரேஷியோ' எனப்படும் அடிப்படை செலவு விகிதங்கள் நடைமுறை அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், மேலாண்மை கட்டணம் தனியாகவும்; ஜி.எஸ்.டி., மற்றும் எஸ்.டி.டி., போன்ற வரிகள் தனியாகவும் காட்டப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களுக்கு வெளிப்படைத்தன்மையை அளிக்க இந்த நடவடிக்கை அறிமுகப்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மியூச்சுவல் பண்டு திட்டங்களுக்கான செயல்பாட்டு கட்டண உச்சவரம்பை செபி குறைத்துள்ளது. செபி நிர்ணயித்த வரம்பிற்கு மேல் ஏற்படும் எந்தவொரு செலவையும் மியூச்சுவல் பண்டு நிறுவனங்களே ஏற்க வேண்டும் எனவும்; அதை முதலீட்டாளர்களிடம் வசூலிக்கக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018ல் அறிமுகப்படுத்தப்பட்ட 0.05 சதவீத கூடுதல் 'எக்ஸிட் லோடு' கட்டணம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

Advertisement