ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.4 லட்சத்தை எட்ட வாய்ப்பு
அமெரிக்கா, உள்நாட்டு பாதுகாப்பை முன்னிட்டு, முக்கிய கனிமங்களுக்கு இறக்குமதி சுங்க வரிகளை விதிக்க இருந்த நிலையில் தற்போது தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் வெள்ளி விலை, கடந்த இரண்டு நாட்களில் குறிப்பிடத்தக்க சரிவை சந்தித்தன.
கடந்த நான்கு வர்த்தக நாட்களில் மட்டும் 20 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்திருந்த வெள்ளி, முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்ததன் காரணமாக, சரிவை சந்தித்திருப்பதாக தெரிகிறது.
அமெரிக்க பெடரல் வங்கி தலைவர் தொடர்பான கருத்துகளிலும், ஈரான் விவகாரத்திலும் டிரம்ப் மிதமான நிலைப்பாட்டை எடுத்துள்ளதால், உடனடி அரசியல் மற்றும் வர்த்தக அச்சங்கள் குறைந்துள்ளன. இதன் காரணமாக, தங்கம் மற்றும் வெள்ளி மீதான முதலீட்டு தேவை தற்காலிகமாக தளர்ந்துள்ளது. எதிர்பார்ப்பை விட பலவீனமான வாராந்திர வேலைவாய்ப்பு தரவுகள் வெளியானதும், அமெரிக்க டாலர் மதிப்பு வலுப்பெற்றதும் விலை சரிவுக்கு ஒரு காரணமாகும்.
இருப்பினும், வாராந்திர அடிப்படையில் பார்க்கும்போது, சர்வதேச சந்தையில், வெள்ளி விலை சுமார் 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. தங்கம் விலையும் இந்த வாரத்தில் 2 சதவீதத்திற்கும் மேலான உயர்வை பதிவு செய்துள்ளது. இதனால், குறுகிய காலத்தில் சரிவுகள் இருந்தாலும், நடுத்தர மற்றும் நீண்டகாலத்தில் விலை ஏற்றம் தொடரும் என்ற எதிர்பார்ப்பு சந்தையில் நிலவுகிறது.
இந்த எதிர்பார்ப்பை உறுதிப்படுத்தும் வகையில், 'சாம்கோ செக்யூரிட்டீஸ்' நிறுவனம், 2026ம் ஆண்டில் இதுவரை 25 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ள வெள்ளி விலை, ஒரு கிலோவுக்கு 3.94 லட்சம் ரூபாய் வரை உயர வாய்ப்பு உள்ளது என கணித்துள்ளது.
மேலும்
-
திருமுக்கூடல் பெருமாள் கோவிலில் பார்வேட்டை விழா கோலாகலம்
-
பட்டத்து காளைக்கு அபிஷேக ஆராதனை பசுக்களுக்கு உணவளித்து மகிழ்ந்த பக்தர்கள்
-
தேயிலையை தாக்கும் சிவப்பு சிலந்தி நோயால் பாதிப்; பு மகசூல் குறைந்து விவசாயிகளுக்கு நஷ்டம்
-
காமாட்சி அம்மன் கோவிலில் கனு உத்சவம் நிறைவு
-
மாவட்ட மருத்துவமனையில் குருதி பிரித்தெடுப்பு பிரிவை செயல்படுத்துங்க புதிய கருவிகள் வாங்க நிதி இருந்தும் பணியில் சுணக்கம்
-
ரயில் நிலையத்தில் சுகாதாரமான குடிநீர் வழங்க கோரிக்கை