கடலுாரில் பா.ம.க., பொதுக்கூட்டம் 

கடலுார்: கடலுாரில் பா.ம.க.,சார்பில், பொதுக்கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு, பா.ம.க.,கடலுா் கிழக்கு மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநில சொத்து பாதுகாப்பு குழு தலைவர் டாக்டர் கோவிந்தசாமி முன்னிலை வகித்தார்.

பா.ம.க.,தலைவர் அன்புமணி பங்கேற்றார். அவர் தி.மு.க.,வை ஆட்சியிலிருந்து அகற்றுவது தொடர்பாக, சிறப்புரையாற்றினார்.

பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அன்புமணிக்கு, மாவட்டசெயலாளர் முத்துகிருஷ்ணன் செங்கோல் கொடுத்து வரவேற்றார்.

தலைமை நிலைய செயலாளர் செல்வகுமார், மாநில இணை பொதுசெயலாளர் வைத்தி, தேர்தல் பணிக்குழு தலைவர் தாமரைக்கண்ணன், அமைப்பு செயலாளர் தர்மலிங்கம், உழவர் பேரியக்க மாநிலத்தலைவர் ஆலயமணி, மாநில இளைஞர்சங்க செயலாளர் ஆறுமுகம், முன்னாள் எம்.பி.,தனராஜ், கடலுார் கிழக்கு மாவட்டதலைவர் தட்சிணாமூர்த்தி, மாநகராட்சி கவுன்சிலர் சரவணன், மாநில செயற்குழு உறுப்பினர் போஸ் ராமச்சந்திரன், தனசேகர், ஆறுமுகம், மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் விஜயவர்மன், நகர செயலாளர்கள் கண்ணன், ரமேஷ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement