இந்தியா வருகிறார் பிரான்ஸ் அதிபர் மேக்ரான்
பாரிஸ்: பிரான்ஸ் சென்றுள்ள மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்து பேச்சு நடத்தினார். அடுத்த மாதம் இம்ரானுவேல் மேக்ரான் இந்தியா வருவதாக ஜெய்சங்கர் தெரிவித்தார்.
பிரான்ஸ் மற்றும் லக்சம்பர்க் நாடுகளுக்கு 6 நாட்கள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன் நோயலை ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். பிரான்சில் நிருபர்களிடம் ஜெய்சங்கர் கூறியதாவது: இந்தியா- பிரான்ஸ் ஆகிய இருநாடுகளுக்கு இடையே உள்ள இருதரப்பு உறவுகளை தவிர, சர்வதேச அரங்கில் மிகவும் சுறுசுறுப்பாக செயல்படுகிறோம்.
நாங்கள் பல சர்வதேச அமைப்புகளிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். ஐரோப்பாவுடனான தனது உறவை இந்தியா வலுப்படுத்தி வருகிறது. மேலும் இரு தரப்பினரும் சர்வதேச பொருளாதாரம் மற்றும் உலக அரசியலில் அதிக ஸ்திரத்தன்மையைக் கொண்டுவர முடியும். உலக அரசியலில் ஐரோப்பா ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
நாம் எப்படிப்பட்ட உலகில் வாழ விரும்புகிறோம்? விதிமுறைகள் மற்றும் தொடர்புடைய பிற பிரச்னைகள் என்னவாக இருக்கும்? மேலும் உலக அரசியலில் ஐரோப்பா ஒரு முக்கிய பங்கு வகிப்பதாக நான் கருதுவதால், இந்தியா அதனுடனான தனது உறவை வலுப்படுத்துவதும் அவசியம். ஐரோப்பாவுடனான இந்த உறவு உண்மையில் வளரவும், அடுத்த கட்டத்திற்கு வளரவும் தயாராக உள்ளது. இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.
பாராட்டுக்கள்
பிரான்ஸ் அதிபரை சந்தித்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து ஜெய்சங்கர் கூறியிருப்பதாவது: இன்று பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானை சந்தித்து பிரதமர் மோடியின் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
உலகளாவிய முன்னேற்றங்கள் மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான அவரது தொலைநோக்கு பார்வைக்கு பாராட்டுக்களை தெரிவிக்கிறேன். இவ்வாறு ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
ஆமாம்