ஏழைகளின் உழைப்பை சுரண்டும் நவீன தந்திரம்

3

தைத்திருநாளில் தமிழர்களின் இல்லங்களில் இன்பம் பொங்கியதோ இல்லையோ, தி.மு.க., அரசின் கஜானாவில் மது விற்பனை பணம் மட்டும் பொங்கி வழிந்திருக்கிறது. பொங்கல் பரிசு என்ற பெயரில், தமிழக மக்களுக்கு ஒரு கையில் அன்பளிப்பு கொடுத்து, மறு கையில், 'டாஸ்மாக்' வாயிலாக அதை அப்படியே பிடுங்கிக் கொள்வது, ஏழை மக்களின் உழைப்பை சுரண்டும் நவீன தந்திரம் அன்றி வேறில்லை.

மது கோப்பைகளை நிரப்புவதிலும், இலக்கு வைத்து கல்லா கட்டுவதிலும் தி.மு.க., அரசு காட்டும் ஆர்வத்தில், ஒரு சிறு துளி அக்கறையையாவது, சீர்கெட்டு போன சட்டம் - ஒழுங்கை சரி செய்வதில் காட்டியிருந்தால், இன்று தமிழகம் எவ்வளவோ தலை நிமிர்ந்து நின்றிருக்கும். தமிழக மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது தான், உண்மையான வளர்ச்சியே தவிர, மது விற்பனையில் சாதனை படைப்பது அல்ல.



- அருண்ராஜ்

கொள்கை பரப்பு பொதுச்செயலர், த.வெ.க.,

Advertisement