சி.எம்.சி., டாக்டர் வீட்டில் போதை பொருள் பறிமுதல்
வேலுார்: கேரளாவைச் சேர்ந்தவர் டாக்டர் பெல்கிங்; வேலுார் சி.எம்.சி., மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர், தோட்டப்பாளையம் பிள்ளையார் கோவில் தெருவிலுள்ள டாக்டர்கள் குடியிருப்பில் வசிக்கிறார்.
அங்கு, இரு கார்களில், சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து, ஏழு அதிகாரிகள், எல்லை பாதுகாப்பு படை போலீசாருடன் வந்தனர். அவர்கள், டாக்டர் பெல்கிங் வீட்டில் சோதனை நடத்தினர்.
நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு துவங்கிய சோதனை, நேற்று பகல் 11:00 மணி வரை, 27 மணி நேரம் நடந்தது. இதில், டாக்டர் வீட்டிலிருந்து 100 கிராம் கஞ்சா மற்றும் 20 கிராம், 'மெத் ஆம்பெட்டமைன்' போதை பொருளை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, காட்பாடியிலுள்ள போதை பொருள் தடுப்பு பிரிவில் புகார் செய்ய சென்றனர். அங்கு, 1 கிலோவுக்கு மேல் போதை பொருட்கள் இருந்தால் மட்டுமே, வழக்கு பதிய முடியும் என கூறி, அமலாக்கத்துறை அதிகாரிகளை திருப்பி அனுப்பினர்.
அதன்படி, அ வர்கள், வேலுார் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் அளித்தனர். புகாரை பெற்ற போலீசார், வழக்கு பதிந்து விசாரணை நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.
அப்ப போதைப்பொருள் 999 கிராம் வைத்துக் கொள்ளலாமா
உயிரை காப்பாற்ற வேண்டிய மருத்துவர்களிடம், உயிரைப்போக்கும் போதைப்பொருட்கள். கலிகாலம் முற்றிவிட்டது. இனி இவ்வுலகில் மக்கள் வாழ்வது மிக மிக கடினம்.மேலும்
-
சாகித்ய விருதுக்கு போட்டியாக இனி செம்மொழி இலக்கிய விருது; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
காங்கிரஸ் மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டது: பிரதமர் மோடி பேச்சு
-
நாளை மீண்டும் சிபிஐ விசாரணை; இன்று மாலை தனி விமானத்தில் டில்லி பறக்கும் விஜய்
-
தர்மம் தான் நம் அனைவரையும் இயக்கும் சக்தி; ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்
-
வங்கதேசத்தை குழப்பத்தில் தள்ளும் முகமது யூனுஸ்; ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு
-
நாட்டை கைப்பற்ற டிரம்ப் தீவிரம்; எதிர்ப்பு தெரிவித்து கிரீன்லாந்து மக்கள் போராட்டம்