தவெக தேர்தல் அறிக்கை தயாரிக்க 11 பேர் கொண்ட குழு; விஜய் அறிவிப்பு

17


சென்னை: தேர்தல் அறிக்கை தயாரிக்க 11 பேர் கொண்ட குழுவை அமைத்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவித்தார்.


தமிழக சட்டசபை தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகிறது. தேர்தல் பணிகளை விறுப்பாக செய்து வருகிறது. ஒரு பக்கம் கூட்டணி பேச்சுவார்த்தை, மறுபக்கம் தொகுதி பங்கீடு என தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில் தவெக தலைவர் விஜய் தேர்தல் பணிகளை தொடங்கி விட்டார். தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைத்து இருக்கிறார். அவரது அறிக்கை:

தமிழக மக்களின் முன்னேற்றத்தையும் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் நோக்கமாகக் கொண்டு, நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட இருக்கிறது. இதற்காகச் சிறப்புக் குழு அமைக்கப்படுகிறது.



இந்தக் குழு, தமிழகம் முழுவதும் பொதுமக்கள், சிறு, குறு தொழில் அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள், பொருளாதார மற்றும் தொழில் வல்லுனர்கள், வர்த்தக சபைகள், பல்வேறு ஊழியர் சங்கங்கள், விவசாயச் சங்கங்கள், கல்வியாளர்கள், டாக்டர்கள், நர்ஸ்கள், மகளிர் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் தேவைகளையும் அறிந்து, தரவுகளைப் பெறவுள்ளது.


அவர்களிடம் இருந்து பெறப்படும் தரவுகளின் அடிப்படையில் தமிழக மக்களையும் ஒட்டுமொத்த மாநிலத்தையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் தேர்தல் அறிக்கையினைத் தயார் செய்யவுள்ளது. இந்த குழுவினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, கட்சியினர் அனைத்து உதவிகளும் செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

@block_P@

குழுவில் 11 பேர்; செங்கோட்டையனுக்கு 'நோ'!

1. அருண் ராஜ், 2.பிரபாகர், 3. ராஜ்மோகன், 4. மயூரி, 5. சம்பத்குமார், 6. அருள் பிரகாசம், 7.பரணிபாலாஜி, 8. முகமது பர்வேஸ், 9. பிரபு, 10. கிறிஸ்டி பிருத்வி, 11. தேன்மொழி பிரசன்னா, 12. சத்யகுமார் ஆகியோர் குழுவில் இடம் பெற்று உள்ளனர்.


அண்மையில் தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு இந்த குழுவில் இடம் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.block_P

Advertisement