திருமண ஹோமம், ஆண்டாள் திருக்கல்யாணம்

மதுரையில் திருமணத்தடை நீக்கும் 'சுயம்வர கலாபார்வதி' மற்றும் 'கந்தர்வராஜர்' யாகங்கள், ஆண்டாள் திருக்கல்யாணம் நடந்தது.

மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வு எஸ்.எஸ். காலனி, எஸ்.எம்.கே. திருமண மண்டபத்தில் நடந்தது. திருமணம் தள்ளிப் போவோருக்கு சீக்கிரமே நல்ல வரன் அமைய வேண்டி, விசேஷ யாகங்கள் நடத்தப்பட்டன.

சந்தோஷ் சாஸ்திரிகள் தலைமையிலான வேத விற்பன்னர்கள் இந்த யாகங்களை நடத்தினர். விசேஷ ஹோமங்களோடு சங்கல்பங்கள் செய்யப்பட்டன.


மாலையில் நெல்லை வெங்கடேஸ்வர பாகவதர் குழுவினரின் 'ஆண்டாள் திருக்கல்யாண வைபவம்' நாம சங்கீர்த்தனம் நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு ஸ்ரீகாஞ்சி மகாபெரியவரின் பெரிய அளவிலான பிரேம் செய்யப்பட்ட புகைப்படம், பிரசாதம், அட்சதை வழங்கப்பட்டன.
அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Advertisement