பிரிட்டனில் மோசமான வானிலை... திருப்பிவிடப்பட்ட ஏர் இந்தியா விமானங்கள்
லண்டன்: பிரிட்டனுக்கு புறப்பட்டு சென்ற இரு ஏர் இந்தியா விமானங்கள், மோசமான வானிலை காரணமாக வேறு பகுதிக்கு திருப்பிவிடப்பட்டன.
இது தொடர்பாக விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது; மும்பையில் இருந்து லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானம், மோசமான வானிலை காரணமாக, காட்விக் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. அங்கு விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்பட்டுள்ளது.
அதேபோல, அமிர்தசரஸில் இருந்து பிர்மிங்காம் நகருக்கு புறப்பட்டு சென்ற மற்றொரு ஏர் இந்தியா விமானம், மோசமான வானிலை காரணமாக லண்டனில் தரையிறக்கப்பட்டது. இது தொடர்பாக லண்டன் விமான நிலைய அதிகாரிகளிடம் அனுமதி பெற்று விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டது, இவ்வாறு கூறினார்.
அடுத்தடுத்த ஏர் இந்தியா விமானம் வேறு இடங்களுக்கு திருப்பி விடப்பட்டதால், பயணிகளுக்கு அலைச்சல் ஏற்பட்டது.
மேலும்
-
திருமண ஹோமம், ஆண்டாள் திருக்கல்யாணம்
-
டில்லியில் டிஜிட்டல் அரெஸ்டில் ரூ.15 கோடி இழந்த டாக்டர் தம்பதி
-
சிரியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்: ஐஎஸ் பயங்கரவாதிகள் முகாம்கள் அழிப்பு
-
இந்தியாவின் வலிமையை காட்டும் சோம்நாத் கோவில் கொடி: பிரதமர் மோடி பெருமிதம்
-
ஆபாச உள்ளடக்க விவகாரத்தில் தவறை ஒப்புக் கொண்டது க்ரோக்: 600 கணக்குகள் நீக்கியது
-
நோபல் பரிசை வேறொருவரிடம் பகிர முடியாது: வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் கருத்துக்கு எதிர்ப்பு