போலி ஆவணங்களை கொடுத்து அரசு வேலை; உ.பி.,யில் சிக்கிய பாகிஸ்தான் பெண்!
லக்னோ: பாகிஸ்தானை சேர்ந்த பெண், உத்தரபிரதேசத்தில் போலி ஆவணங்களைக் கொடுத்து அரசு வேலையில் சேர்ந்து பணியாற்றி வந்தது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இது தொடர்பாக ஆசிம் நகர் போலீசார் தரப்பில் கூறியதாவது; ஆரம்ப கல்வித்துறை சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில், மஹிரா அக்தர், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வேலையில் சேர்ந்துள்ளார். அவர் கும்ஹரியா கிராமத்தில் உள்ள ஆரம்பப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். பாகிஸ்தான் குடியுரிமை பெற்ற இவர், வேலைக்காக போலி ஆவணங்களைப் பயன்படுத்தியுள்ளார்.
அவர் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 1979ம் ஆண்டு பாகிஸ்தானைச் சேர்ந்த நபரை திருமணம் செய்துள்ளார். பின்னர், விவாக ரத்து ஆன பிறகு, பாகிஸ்தான் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி இந்தியாவுக்கு வந்துள்ளார். 1985ம் ஆண்டு இந்தியரை திருமணம் செய்து கொண்டார். இந்திய குடியுரிமை பெற்றவரைப் போல நடித்து, அரசு வேலையில் சேர்ந்துள்ளார்.
இவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் எனத் தெரிய வந்த பிறகு, பள்ளிக்கல்வித்துறை அவரை பணியில் இருந்து நீக்கியுள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை எந்த கைது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, என தெரிவித்தனர்.
இது ஒரு கவனக்குறைவு.
இந்த லட்சணத்தில் வேலை செய்யுது நம் நாட்டில் உள் துறை.
உடன் பிறப்பே இது நடந்தது ௧௯௮௫.. அப்போ நம்ப ராகுல் கான் குடும்பத்தாரின் ஆட்சி..மேலும்
-
திருமண ஹோமம், ஆண்டாள் திருக்கல்யாணம்
-
சிரியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்: ஐஎஸ் பயங்கரவாதிகள் முகாம்கள் அழிப்பு
-
இந்தியாவின் வலிமையை காட்டும் சோம்நாத் கோவில் கொடி: பிரதமர் மோடி பெருமிதம்
-
ஆபாச உள்ளடக்க விவகாரத்தில் தவறை ஒப்புக் கொண்டது க்ரோக்: 600 கணக்குகள் நீக்கியது
-
நோபல் பரிசை வேறொருவரிடம் பகிர முடியாது: வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் கருத்துக்கு எதிர்ப்பு
-
தொடர் போராட்டத்தால் பதற்றம்; ஈரான் விடுதலைக்கு உதவ தயார் என்கிறார் அதிபர் டிரம்ப்