தமிழக மக்களின் 11 கனவுப்பட்டியலை நாங்கள் சொல்கிறோம்: முதல்வருக்கு நயினார் பதில்
சென்னை: சீரான சட்டம் ஒழுங்கு, கள்ளச்சாராயமும் கஞ்சாவும் இல்லாத தமிழகம், பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான தமிழகம் என தமிழக மக்களின் 11 கனவுப்பட்டியலை நாங்கள் சொல்கிறோம் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: “உங்கள் கனவை சொல்லுங்கள்” என்ற பெயரில் தமிழகத்தில் புதியதொரு திட்டம் ஒன்றை முதல்வர் ஸ்டாலின் துவக்கி இருக்கிறார். நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு மெல்ல தூக்கத்திலிருந்து விழித்திருக்கும் முதல்வருக்குத் தமிழக மக்களின் கனவுப் பட்டியலை நாங்கள் சொல்கிறோம்:
1. சீரான சட்டம் ஒழுங்கு.
2. கள்ளச்சாராயமும் கஞ்சாவும் இல்லாத தமிழகம்.
3. பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பான தமிழகம்.
4. திமுகவின் வெற்று விளம்பரம் இல்லாத தமிழகம்.
5. அரசுத் துறைகளில் ஊழல் இல்லாத தமிழகம்.
6. ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தன்மானத்துடன் வாழும் தமிழகம்.
7. தூய்மைப் பணியாளர்கள் விவசாயிகள், அங்கன்வாடி ஊழியர்கள் ஆகியோர் கண்ணீர் சிந்தாமல் வாழும் தமிழகம்.
8. அரசின் அநீதிகளை எதிர்த்து கேள்வி கேட்பவர்களை அடக்கும் பாசிசம் இல்லாத தமிழகம்.
9. விசாரணைக் கைதிகள், புலம்பெயர்ந்தோர் உள்ளிட்ட எவரும் கொல்லப்படாத தமிழகம்.
10. கல்விக் கடன் தள்ளுபடி செய்வோம், அரசு ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம், காஸ் சிலிண்டர் விலையைக் குறைப்போம் என்று பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்து தமிழக மக்களை ஏமாற்றாத அரசு.
11. ஹிந்துமத வெறுப்பில்லாத அரசு.
மொத்தத்தில், திமுக இல்லாத தமிழகம் வேண்டும். அதுவே, தமிழக மக்களின் கனவு. தமிழக மக்களின் இந்தக் கனவு வெகு விரைவில் நிறைவேறும். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (30)
Manohar Manoj - ,
10 ஜன,2026 - 10:04 Report Abuse
very good dream 0
0
Reply
sathya / ilangai - colombo,இந்தியா
09 ஜன,2026 - 21:32 Report Abuse
என்னோட கனவு , டொனால்ட் டிரம்ப் க்கு தமிழ் சொல்லி குடுக்கணும். 0
0
Reply
muthu - tirunelveli,இந்தியா
09 ஜன,2026 - 19:58 Report Abuse
1.FIRST LET CENTRAL BJP GIVE ELIGIBLE TAX COLLECTED PAISE FROM TN TO TAMILNADU GOVT WITHOUT ANY BIAS
2, LET BJP PINPOINT THE SOLUTION TO THE PROBLEM TO TN GOVT INSTEAD POLITICS WAY OF HANDLING ISSUES 0
0
vivek - ,
09 ஜன,2026 - 22:03Report Abuse
Muthu let tamilnadu govt give expenses details...don't bluff for looting 0
0
Reply
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
09 ஜன,2026 - 19:42 Report Abuse
முதலில் தமிழ்நாடு என்ற பெயரை நீக்கி, தமிழகம் அல்லது தக்ஷிண பிரதேஷ் என்று மாற்றவேண்டும். இரண்டாவது மும்மொழி கொள்கை. மூன்றாவது மதமாற்ற தடை சட்டம். நான்காவது திருப்பரங்குன்றத்தில் தீபம். ஐந்தாவது அறநிலை துறை மூடுவது. ஆறாவது தொல்லியியல் துறையை மூடுவது. ஏழாவது திகவை தடை செய்வது. 0
0
Reply
Raj S - North Carolina,இந்தியா
09 ஜன,2026 - 19:10 Report Abuse
பெரு வாரியான தமிழக மக்களின் எண்ணத்தை நயினார் பிரதிபலித்திருக்கிறார்... 0
0
Reply
என்றும் இந்தியன் - Kolkata,இந்தியா
09 ஜன,2026 - 19:10 Report Abuse
தமிழக மக்களின் 1 கனவுப்பட்டியலை நாங்கள் சொல்கிறோம்: முதல்வருக்கு நன்மக்கள் பதில். ஊழல் பணம் தமிழ்நாட்டு கருவூலத்திற்கு திரும்ப வேண்டும் 0
0
Reply
rama adhavan - chennai,இந்தியா
09 ஜன,2026 - 18:47 Report Abuse
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை என்றால் நிறைவேற்றுவாரா. 0
0
Reply
அப்பாவி - ,
09 ஜன,2026 - 17:03 Report Abuse
அந்த பாஞ்சி லட்சம் கனவை உட்டுட்டீங்களே, ஓ.. அது வேற கனவா 0
0
vivek - ,
09 ஜன,2026 - 18:30Report Abuse
அப்பாவி...அது உன் மண்டையில் தோன்றியது. ஓரமா உக்கார்ந்து ஒப்பாரி வை 0
0
Reply
vivek - ,
09 ஜன,2026 - 16:55 Report Abuse
அப்போ கனவு திட்டமும் பணால் பணால் பணால் 0
0
Reply
Ramanujam Veraswamy - Madurai,இந்தியா
09 ஜன,2026 - 16:17 Report Abuse
Sri Nainar Nagrndran is asking Utopian Statr which Scientific Corrupt DMK Govy cannot give. 0
0
Reply
மேலும் 18 கருத்துக்கள்...
மேலும்
-
திருமண ஹோமம், ஆண்டாள் திருக்கல்யாணம்
-
சிரியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்: ஐஎஸ் பயங்கரவாதிகள் முகாம்கள் அழிப்பு
-
இந்தியாவின் வலிமையை காட்டும் சோம்நாத் கோவில் கொடி: பிரதமர் மோடி பெருமிதம்
-
ஆபாச உள்ளடக்க விவகாரத்தில் தவறை ஒப்புக் கொண்டது க்ரோக்: 600 கணக்குகள் நீக்கியது
-
நோபல் பரிசை வேறொருவரிடம் பகிர முடியாது: வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் கருத்துக்கு எதிர்ப்பு
-
தொடர் போராட்டத்தால் பதற்றம்; ஈரான் விடுதலைக்கு உதவ தயார் என்கிறார் அதிபர் டிரம்ப்
Advertisement
Advertisement