ஈஸ்ட் பெங்கால் ஆறாவது வெற்றி

கோல்கட்டா: இந்தியாவில் பெண்களுக்கான கால்பந்து லீக் (ஐ.டபிள்யு.எல்.,) தொடர், கோல்கட்டாவில் நடக்கிறது. ஈஸ்ட் பெங்கால், தமிழகத்தின் சேது (மதுரை), கோகுலம் கேரளா உட்பட மொத்தம் 8 கிளப் அணிகள் பங்கேற்கின்றன. இதன் ஏழாவது சுற்று போட்டிகள் நேற்று நடந்தன.
மேற்கு வங்கத்தின் கல்யாணி மைதானத்தில் நடந்த போட்டியில் ஈஸ்ட் பெங்கால், கோகுலம் கேரளா அணிகள் மோதின.
பஜிலா (35 வது நிமிடம்), ரேஸ்டி (55), சுலஞ்சனா (76) தலா ஒரு கோல் அடிக்க, ஈஸ்ட் பெங்கால் அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
கோல்கட்டாவில் நடந்த போட்டியில் தமிழகத்தின் சேது அணி, 4-1 என்ற கார்வல் யுனைடெட் அணியை வென்றது. சேது அணிக்கு துர்கா (53), மாளவிகா (60), லிண்டா (62), நிர்மலா (74) தலா ஒரு கோல் அடித்து உதவினர்.
மற்றொரு போட்டியில் கோல்கட்டாவின் ஸ்ரீபூமி அணி 2-3 என்ற கணக்கில் ஒடிசாவின் நீடா அணியிடம் தோல்வியடைந்தது. கிக்ஸ்டார்ட் அணி 3-1 என சேசா அணியை வீழ்த்தியது.
இதுவரை நடந்த போட்டியின் முடிவில் ஈஸ்ட் பெங்கால் அணி (6 போட்டி, 6 வெற்றி) 18 புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளது. சேது (16), நீடா (13) அணிகள் அடுத்த இரு இடத்தில் உள்ளன.

Advertisement