ஜி.டி.பி., 7.50% வளரும் என்கிறது எஸ்.பி.ஐ.,

2

புதுடில்லி: நடப்பு நிதியாண்டில் நாட்டின் ஜி.டி.பி., வளர்ச்சி 7.50 சதவீதமாக இருக்கும் என எஸ்.பி.ஐ., வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

மேலும் ஆய்வறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது:

2025--26 நிதியாண்டில், இந்தியாவின் ஜி.டி.பி., வளர்ச்சி, கிட்டத்தட்ட 7.50 சதவீதமாக இருக்கும் என்று நம்புகிறோம். அது மேலும் கூட அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதற்கான, அதிகாரப்பூர்வ இரண்டாவது மதிப்பீட்டுத் தரவுகள் வரும் பிப்ரவரி 27ல் வெளியிடப்படும். கடந்த நவம்பர் மாத முடிவில், நிதி பற்றாக்குறை 9.80 லட்சம் கோடி ரூபாய் அல்லது பட்ஜெட் மதிப்பீட்டில் 63 சதவீதமாக இருந்தது.

பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டதை விட, வரி வருவாய் குறைவாக இருக்கும். வரி அல்லாத வருவாய் அதிகமாக இருக்கும். இதனால், ஒட்டு மொத்தமாக, அரசின் வருமானத்தில் பெரிய பாதிப்பு இருக்காது. இதே போன்று, மொத்த செலவுகளும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்ட 15.69 லட்சம் கோடி ரூபாயோடு ஒப்பிடுகையில், நிதிப் பற்றாக்குறை 15.85 லட்சம் கோடி ரூபாயாக இருக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.

Advertisement