தேவிபட்டினம் ஆற்றங்கரை கடலில் சீற்றம்

தேவிபட்டினம்: குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆற்றங்கரை கடல் சீற்றமடைந்துள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

இரண்டு நாட்களாக மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேவிபட்டினம், ஆற்றங்கரை பகுதிகளில் கடலில் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகின்றன. ஆற்றங்கரை முகத்துவார கடல் பகுதியில் எப்போதும் அலைகள் இயல்பாக காணப்படுவது வழக்கம்.

இதனால் தினமும் மாலையில் அமைதியான ஆற்றங்கரை கடலை ரசிப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் சென்று வருவது வழக்கம்.

இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு நிலையால் கடந்த இரண்டு நாட்களாக வழக்கத்துக்கு மாறாக ஆற்றங்கரை கடலில் தொடர் அலைகள் ஏற்பட்டு கடல் சீற்றமாக உள்ளது.

Advertisement