312 சவரன் நகை மாயம்; தனி நீதிபதி விசாரணை தேவை

@quote@ காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், சோமாஸ்கந்தர், ஏலவார்குழலி போன்ற உற்சவ மூர்த்தி திருமேனிகளை வடிவமைப்பதற்காக, பக்தர்களிடம், 312 சவரன் தங்க நகை நன்கொடையாக பெறப்பட்டது. திருமேனிகள் ஒவ்வொன்றிலும், 5 சதவீதம் தங்கம் சேர்க்கப்பட வேண்டும் என்பது விதி.


அதன்படி, 8.7 கிலோ தங்கம் சேர்க்க வேண்டும். திருமேனிகளில் தங்கம் சேர்க்கப்பட்டதா என்பது குறித்து, அண்ணாமலை என்பவர் கடந்த 2017ல் தொடர்ந்த வழக்கில், ஐ.ஐ.டி., குழு ஆய்வுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.


அந்த ஆய்வில், ஒரு கிராம் தங்கம் கூட சேர்க்கவில்லை என தெரிய வந்துள்ளது. பக்தர்கள் வழங்கிய 312 சவரன் தங்க நகை எப்படி மாயமானது, எங்கே போனது. தமிழகத்தில் வேறு எந்தெந்த கோவில்களில் இதுபோன்று தங்க நகைகள் மாயமாகின என்பதை கண்டறிய, தனி நீதிபதி வாயிலாக விசாரணை நடத்த வேண்டும்.



- காடேஸ்வரா சுப்ரமணியம், தலைவர், ஹிந்து முன்னணிquote

Advertisement