அரசில் பங்கு இல்லாவிட்டால் அரசியல் கட்சி எதற்கு?
@quote@ ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது புதுமையான சிந்தனையோ, விசித்திரமான சிந்தனையோ, முதல் முறையாக உதிக்கின்ற சிந்தனையோ கிடையாது. அனைத்து அரசியல் கட்சிக்குமே, தேர்தலில் தங்கள் பிரதிநிதிகள் நின்று வெற்றி பெற வேண்டும். அரசில் பங்கு பெற வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். இந்த எண்ணம் கூட இல்லை என்றால், எதற்காக அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும்; ரோட்டரி சங்கங்களாக இருக்கலாமே. தி.மு.க., கூட்டணிக்குள் நெருக்கடி இல்லை.
அதிகாரப்பூர்வமாக தி.மு.க.,வை தவிர வேறு யாரிடமும் காங்கிரஸ் பேசவில்லை. காங்கிரஸ் கட்டமைப்பை பலப்படுத்துமாறு பலமுறை நான் கூறி வருகிறேன். ஆனால், கட்சி தலைமை என் கருத்தை நிராகரித்து வருகிறது. எனக்கு நிதிநிலை பற்றி தெரியவில்லை. ஆனால், நான் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தால், மகளிர் உரிமைத் தொகையாக, மாதம் ஆயிரத்திற்கு பதிலாக 2,000 ரூபாய் நிச்சயமாக கொடுப்பேன்.
- கார்த்தி, எம்.பி., - காங்.,quote
காங்கிரஸ் தோற்றுவிக்கப்பட்டதன் நோக்கமே வேறு. அதனால் தான் காங்கிரஸை கலைக்கச் சொன்னார் மகாத்மா காந்தி. பெயரை மாற்றி கொண்டு அரசியல் கட்சி நோக்கம் பற்றி பேசட்டும்.மேலும்
-
125 நாள் வேலை உறுதி திட்டத்தில் முறைகேடுகள் தடுக்கப்படும்; பா.ஜ., தேசிய செயல் தலைவர் நிதின் நபின் உறுதி
-
கியூபாவின் அடுத்த அதிபர்; கேள்விக்கு அதிபர் டிரம்ப் அதிர்ச்சி பதில்
-
இந்திய அணி வெற்றி; புதிய மைல் கல்லை எட்டிய கோலி!
-
பாகிஸ்தான் ராணுவத்திற்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு; ஒப்புக்கொண்ட பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதி
-
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டிலும் நியாயம் வெல்லும்; இந்து முன்னணி
-
ஆண்டுக்கு ரூ. 28 லட்சம் சம்பளத்தை உதறி சொந்த தொழிலில் சாதித்த பெண்; குவிகிறது பாராட்டு