வசனம் பேசிக்கொண்டு 'ஷூட்டிங்' தான் நடத்துகிறார்

1

@quote@ பா.ம.க.,வும், அ.தி.மு.க.,வும் கூட்டணி சேர்ந்து விட்டதால், தி.மு.க.,வினர் தலையில் துண்டு போட்டு ஓரமாக உட்கார்ந்து விட்டனர். கடந்த ஐந்தாண்டுகளில், தமிழகத்தை தி.மு.க., நாசம் செய்துவிட்டது. தாத்தா, தந்தை, கணவர், மகன் என, தலைமுறைகளுக்கே மதுவை கொடுத்து, போதை பழக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர். முதல்வர் ஸ்டாலின், வசனம் பேசிக் கொண்டு, 'ஷூட்டிங்' தான் நடத்துகிறார்.

இதற்கு முன், பொங்கலுக்கு பணம் தரவில்லை. இப்போதோ 3,000 ரூபாய் கொடுக்கிறார். அதை டாஸ்மாக் டோக்கனாகவே கொடுத்திருக்கலாம். ஏனென்றால், பணம் அங்குதானே போகப்போகிறது. கடந்த தேர்தலின்போது, தி.மு.க., அளித்த 505 வாக்குறுதிகளில், 66 மட்டுமே முழுமையாக நிறைவேற்றப்பட்டன. மின்சார கட்டணம், வரிகள், போக்குவரத்து கட்டணம் என அனைத்தையும் உயர்த்தி விட்டனர். இது, தமிழக மக்களுக்கு தி.மு.க., செய்த மிகப்பெரிய துரோகம்.

- அன்புமணி, தலைவர், பா.ம.க.,quote

Advertisement