'பொங்கல் பரிசு தொகைக்காக பயிர் கடன் பணம் மடைமாற்றமா?'
சென்னை: தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கை:
தமிழக கூட்டுறவு சங்கங்களில், பழைய பயிர் கடன் முழு தொகையையும் கட்டிவிட்டு, புதிய கடன் புதுப்பிப்புக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான விவசாயிகள், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.
இந்நிலையில், பொங்கலுக்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா 3,000 ரூபாய் வழங்க, தி.மு.க., அரசிடம் பணம் இல்லாமல், விவசாயிகளின் பயிர் கடன் பணத்தை மடைமாற்றி, பல ஆயிரக்கணக்கான விவசாயிகளை மன உளைச்சலுக்கு தள்ளியிருக்கிறது.
பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதே விவசாயத்தை போற்றுவதற்காகத்தான் எனும்போது, தங்களது தேர்தல் விளம்பரத்துக்காக, தமிழக விவசாயிகளை திட்டமிட்டு மோசடி செய்திருக்கிறது தி.மு.க., அரசு.
உடனே, விவசாயிகளின் பயிர் கடன்களை புதுப்பித்து, அதற்கான பணத்தை விடுவிக்க வேண்டும். விவசாயிகளின் வாழ்க்கையுடன் தி.மு.க., அரசு விளையாட வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இவனுக்கு வேற வேலை இல்லையா, சும்மா சும்மா பொய் பேசிக்கிட்டு இருக்கான், இவன் பேசிய பித்தலாட்டத்துக்குத்தான் இப்போ அம்போன்னு ஒக்காந்திருக்கன்,
மக்களுக்கிடையே குழப்பம் கலவரம் ஏற்படுத்துவது இந்த பிஜேபி மூர்க்கனுங்க, அண்ணாமலை போன்ற மூர்க்கனுக்கு துடைப்பத்தால் அடி விழும்,மேலும்
-
விதிகளை குறைத்து வர்த்தகத்தை எளிதாக்க செபி முயற்சி
-
ஃபண்டமென்டல் அனாலிசிஸ் : வளர்ச்சியில் கவனம் செலுத்தும் கோட்டக் மஹிந்திரா
-
'ஜெயலலிதா மகள்' என கூறியவரை விரட்டியடித்த அ.தி.மு.க., தொண்டர்கள்
-
ஜாதி பெயரை நீக்கும் உத்தரவு: ஐகோர்ட் இடைக்கால தடை
-
ஸ்மார்ட்டான கட்டமைப்பை உருவாக்குகிறோம்
-
ரூ.40,000 கோடி திரட்ட 'ஜியோ' திட்டம்