ஏலதாரர்கள் 'சிண்டிகேட்'டால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு
தாரமங்கலம்: ஏலதாரர்கள், 'சிண்டிகேட்' அமைத்து, ஆடு அடிக்கும் தொட்டி, பஸ் ஸ்டாண்ட் கழிப்பிடத்தை ஏலம் எடுத்தனர். இதனால் தார-மங்கலம் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது.
தாரமங்கலம் நகராட்சி அலுவலகத்தில், வாரச்சந்தை, தினசரி மார்க்கெட், ஆடு அடிக்கும் தொட்டி, பஸ் ஸ்டாண்ட் கழிப்பிட ஏலம் நேற்று நடந்தது. கமிஷனர் சுதர்சன்(பொ) தலைமை வகித்தார். 13வது முறை நடந்த வாரச்சந்தை ஏலத்துக்கு, 20.30 லட்சம் ரூபாய் என, அரசு விலை நிர்ணயித்திருந்தது. ஏற்கனவே நடந்த ஏலத்தில், 16 லட்சம் ரூபாய்க்கு கேட்டிருந்தனர்.
இதனால் அத்தொகையில் இருந்து ஏலம் தொடங்கியது. அத்தொ-கைக்கு ஏலதாரர்கள் யாரும் கேட்கவில்லை. பின் அந்த ஏலம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. தினசரி மார்க்கெட்டுக்கு, 1.20 கோடி ரூபாய் என நிர்ணயித்து ஏலம் தொடங்கியது. ஏலதாரர்கள், 70 லட்சம் ரூபாய்க்கு மட்டும் கேட்டதால் அதுவும் ஒத்திவைக்-கப்பட்டது.
ஆடு அடிக்கும் தொட்டியை, 70,000 ரூபாய்க்கும், பஸ் ஸ்டாண்ட் கழிப்பிடத்தை, 1.35 லட்சம் ரூபாய்க்கும் ஏலம் எடுத்-தனர். ஆனால் இந்த இரு ஏலத்துக்கு முன், ஏலதாரர்கள் சிண்-டிகேட் அமைத்துக்கொண்டனர். இதனால் அங்கு அரசு நிர்ண-யித்த தொகையில் இருந்து அதிகபட்சம், 3,000 ரூபாய் மட்டும் உயர்த்தி ஏலம் கேட்க முடிவு செய்து, அதன்படி ஏலம் எடுத்-தனர். இதனால் நகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்ப்பட்டது.