திறந்த வெளியில் சிறுநீர் கழிப்பதை கண்டித்து மாஸ்க் அணிந்து போராட்டம்

அரூர்: அரூர் பஸ் ஸ்டாண்டில், திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பதை கண்-டித்து, பொதுமக்கள் மாஸ்க் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்-டனர்.


தர்மபுரி மாவட்டம், அரூர் வழியாக சேலம், கோவை, வேலுார், சென்னை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, பெங்களூரு உள்-ளிட்ட இடங்களுக்கு அரசு, தனியார் பஸ்கள் மற்றும் டவுன் பஸ்கள் அரூரில் இருந்து கிராமப்புறங்களுக்கு இயக்கப்படுகின்-றன. தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் அரூர் பஸ் ஸ்டாண்ட் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் அரூரில், 3.62 கோடி ரூபாய் மதிப்பில், சீரமைக்-கப்பட்ட பஸ் ஸ்டாண்டை, கடந்தாண்டு அக்., 24ல் அமைச்சர் நேரு திறந்து வைத்தார். நவீன கழிப்பிட வசதி இருந்தும், அவை பராமரிப்பின்றி உள்ளது. பஸ் ஸ்டாண்டில் அமைக்க வேண்டிய இலவச சிறுநீர் கழிப்பிடம், இங்கு ஏற்படுத்-தவில்லை. இதனால் ஆண்கள் ஒதுங்க வழியின்றி திறந்த வெளியை பயன்படுத்துகின்றனர். இதனால், அப்பகுதியில் சிறுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதை தடுக்க கோரி நேற்று காலை இப்பகுதி மக்கள் மாஸ்க் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திறந்தவெளியில் சிறுநீர் கழிப்பதால், அவை குடியிருப்பு பகு-தியில் தேங்குவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள ஓட்டலில், உணவு சாப்பிட வருவோர் துர்நாற்றம் தாங்க முடியாமல் தவிக்கின்றனர். எனவே, அரூர் பஸ் ஸ்டாண்டில், பொது இடத்தில் சிறுநீர் கழிப்பதை தடுப்பதுடன், இலவச கழிப்பறை வசதி ஏற்படுத்த நகராட்சி நிர்-வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement