நல்லம்பள்ளி வாரச்சந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடு விற்பனை

நல்லம்பள்ளி: தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளியில் நேற்று நடந்த வாரச்சந்-தையில், அதிகாலையில் ஆட்டு சந்தை கூடியது. தர்மபுரி, கிருஷ்-ணகிரி, நாமக்கல் மற்றும் ஆந்திராவை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆடுகளை வாங்க, விற்க வந்-திருந்தனர்.


இன்று பொங்கல் பண்டிகை தொடங்குவதை முன்னிட்டு, நேற்று நடந்த ஆட்டுச்சந்தையில், 3,000க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்ப-னைக்கு கொண்டு வரப்பட்டன. இதில் சிறிய ஆடுகள், 8,000 வரையும், பெரிய ஆடுகள், 30,000 ரூபாய் வரை என, 5 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

* பென்னாகரம் வாரச்சந்தையில் பண்டிகை காலங்களில், கோடிக்-கணக்கான ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையாவது வழக்கம். பென்-னாகரம் சுற்றிலும் காடுகள், மலைகள் சார்ந்த பகுதி என்பதால், இங்குள்ள ஆடுகள் அதிக சுவை தரக்கூடியதாக உள்ளது. நேற்று நடந்த சந்தையில், ஆடுகளை வாங்க சேலம், ஈரோடு, திருப்-பத்துார் மாவட்டங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்-தனர். அதிகாலை, 3:00 மணிக்கு தொடங்கிய ஆடுகள் விற்-பனை, தரத்திற்கேற்ப, 5,000 முதல் 20,000 ரூபாய் வரை விற்-பனை செய்யப்பட்டன.
2,500க்கும் மேற்பட்ட ஆடுகள், 2 கோடி ரூபாய்க்கு மேல் விற்ப-னையானதாக வியபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement