ஊரக வாழ்வாதார பணியாளர் 8ம் நாளாக போராட்டம்

சேலம்: சேலம் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்க அனைத்து பணி-யாளர் சங்கம் சார்பில், 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் காத்திருப்பு போராட்டம், சேலம் கோட்டை மைதா-னத்தி

ல், 8ம் நாளாக நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் சரிதா-செல்வி தலைமை வகித்தார்.
பணி நிரந்தரம் செய்து, ஊதிய உயர்வு வழங்குதல்; ஒப்பந்த முறையை ரத்து செய்தல்; மாவட்ட நிர்வாகம், நேரடியாக பணி-யாளர் வங்கி கணக்கில் ஊதியத்தை வரவு வைத்தல்; பணி பாது-காப்பு அளித்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதுகுறித்து சரிதாசெல்வி கூறுகையில், ''கடந்த, 6 முதல், கலெக்டர் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம்.

8ம் நாள் போராட்டம், கோட்டை மைதானத்தில் நடந்தது. அரசின் முடிவை பொறுத்து, எங்களின் அடுத்தகட்ட நகர்வு இருக்கும்,'' என்றார்.

துணைத்தலைவர் மஞ்சுளா, செயலர் ஜெயலட்சுமி, பொருளாளர் ஜோதி, இணை செயலர்கள்

மகாலிங்கம், சுதா உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement