கோழிப்பண்ணையாளர் போராட்டம்



அரூர்: தர்மபுரி மாவட்டத்தில், 600 கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. 10க்கும் மேற்பட்ட தனியார் கோழிப்பண்ணை நிறுவனங்களிலி-ருந்து தீவனம் மற்றும் குஞ்சுகளை பெற்று, 45 நாட்கள் வளர்த்து, அதன் பின், அதனுடைய எடையை பொறுத்து, ஒரு கிலோவுக்கு, 6.50 ரூபாய் என, கணக்கிட்டு கோழிப்பண்ணையாளர்கள் வளர்ப்பு கூலி பெற்று வருகின்றனர். வளர்ப்பு கூலி உயர்த்திக் கொடுக்க வேண்டும் என, கோழிப்பண்ணை உரிமையாளர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். வளர்ப்பு கூலி உயர்த்தப்படாததால், வரும், 20 முதல், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, தர்மபுரி மாவட்ட கறிக்-கோழி வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் நலச்சங்கத்தினர் தெரி-வித்துள்ளனர்.

இது குறித்து மாவட்ட நிர்வாகிகள் கூறியதாவது: கறிக்கோழி வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் நலச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம் சமீபத்தில் மொரப்பூரில் நடந்தது. அதில், வளர்ப்பு கூலி-யாக கிலோவுக்கு, 20 ரூபாய் தர வேண்டும். தரமான குஞ்சு, தீவ-னங்களை வழங்க வேண்டும். அனைத்து மருந்துகளையும் நிறுவ-னமே தரவேண்டும். கோழி பிடித்த, 7 நாட்களுக்குள் பணம் வழங்க வேண்டும். ஆண்டுதோறும் ஊதிய உயர்வு, 10 சதவீதம் உயர்த்தி தர வேண்டும். மீதமுள்ள தீவனம் மற்றும் கழிவுகோழிகளை நிறுவனமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்-பன உள்ளிட்ட, 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியு-றுத்தி, வரும் 20 முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடு-வது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement