பைக் ரோமியோக்களை கண்காணிக்க ஏ.ஐ., கேமராக்கள் பொருத்தப்படும்: எஸ்.பி.,

தர்மபுரி: ''தர்மபுரியில் அதிவேக வாகனங்கள் மற்றும் பைக் ரோமியோக்-களால் ஏற்படும் விபத்துகளை தடுக்க, ஏ.ஐ., தொழில்நுட்பத்-துடன் கூடிய, ஏ.என்.பி.ஆர்., கேமராக்கள் பொருத்தப்படும்,'' என, மாவட்ட எஸ்.பி., மகேஷ்வரன் தெரிவித்தார்.

தர்மபுரி மாவட்ட போலீசார் சார்பில், நேற்று நடந்த சாலை பாது-காப்பு விழிப்புணர்வு பேரணியை எஸ்.பி., மகேஷ்வரன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:

தர்மபுரி மாவட்டத்தில் இரவு நேர ரோந்து, 32 பீட்டில் இருந்து, 60 ஆக மாற்றப்பட்டதிலிருந்து பெரும்பாலான குற்ற சம்ப-வங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை முதல், கிராமப்புற சாலைகள் வரை, 24 மணி நேரமும் ரோந்து செல்வதால், திருட்டு சம்பவங்கள் சற்று குறைந்துள்ளது. விபத்து மற்றும் குற்ற சம்பவங்களால் பாதிக்கப்-படும் நபர்கள் அவசர உதவி எண், 100ல் தொடர்பு கொண்ட-வுடன், அவர்கள் இருக்கும் இடத்தை ஜி.பி.எஸ்., உதவியுடன் கண்டறிந்து, சம்பவ இடத்திற்கு சென்று, அவர்களை பாது-காக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தர்மபுரி டவுன், மாநில நெடுஞ்சாலை, இரு தேசிய நெடுஞ்சா-லைகளில் அவ்வப்போது, இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடு-கின்றனர். அதிவேகமாக இயக்கபடும் வாகனங்களால் தர்மபுரி மாவட்டத்தில் கடந்த, 2024ல், 370 விபத்து, 2025ல், 400 விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனை தடுக்க, தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, தர்மபுரி டவுன், நான்கு ரோடு உள்ளிட்ட, 8 இடங்களில், ஏ.ஐ., தொழில்நுட்பத்துடன் கூடிய, ஏ.என்.பி.ஆர்., கேமராக்கள் பொருத்தப்படவுள்ளது.
இதன் மூலம், பைக், கார், கனரக வாகனங்கள் அதிவேகத்தில் சென்றால், இந்த கேமராக்கள் மூலம் உடனடி அபராதம், தெளி-வான புகைப்படம் மூலம் சாலை விதிமீறல் வழக்குப்பதிவு செய்-யப்படும். முக்கியமான அரசியல் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சி-களில் பாதுகாப்பிற்கான தேவை கருதி பிரத்யேகமான, 360 டிகிரி கேமராவுடன் கூடிய கார் வாங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.



பைக் பேரணிதர்மபுரி மாவட்ட போலீசார் மற்றும் தர்மபுரி மாவட்ட இரண்டு சக்கர மோட்டார் வாகனங்கள் பழுது பார்ப்போர் நல சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் நடந்த, சாலை பாதுகாப்பு மற்றும் ஹெல்மெட் விழிப்புணர்வு பைக் பேரணியை எஸ்.பி., மகேஷ்-வரன் தொடங்கி வைத்தார்.
இந்த பேரணி எஸ்.பி., அலுவலகத்தில் தொடங்கி, இலக்கியம்-பட்டி, பாரதிபுரம், அரசு மருத்துவமனை, நெசவாளர் காலனி வழியாக சென்று, நான்கு ரோடு சந்திப்பில் நிறைவடைந்தது. ஏ.டி.எஸ்.பி.,க்கள் ஸ்ரீதரன், பாலசுப்பிரமணியம், டி.எஸ்.பி., சிவராமன், போக்குவரத்து எஸ்.ஐ.,சதீஷ், மணிகண்டன் உட்பட இருசக்கர வாகன பழுது பார்ப்போர்
சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

Advertisement