பதற்ற ஓட்டுச்சாவடி கண்டறிய ஆலோசனை

கெங்கவல்லி: கெங்கவல்லி சட்டசபை தொகுதியில் பதற்ற ஓட்டுச்சாவடிகளை கண்டறிதல் குறித்து, அங்குள்ள தாலுகா அலுவலகத்தில் ஆலோ-சனை கூட்டம் நேற்று நடந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர் மோகனசுந்தரம் தலைமை வகித்தார்.

அதில் ஆத்துார் டி.எஸ்.பி., சத்யராஜ் பேசுகையில், ''இத்தொகு-தியில் கடந்த தேர்தலின்போது, 264 ஓட்டுச்சாவடிகள் இருந்த நிலையில், சீரமைப்பு பணிக்கு பின், 280 ஓட்டுச்சாவடிகளாக உள்ளன. அதில் ஏற்கனவே உள்ள பதற்ற ஓட்டுச்சாவடிகள், சீர-மைப்புக்கு பின், பதற்ற ஓட்டுச்சாவடிகள் விபரங்களை, தேர்தல் அலுவலர்கள் ஆய்வு செய்து, இத்தொகுதியில் உள்ள, 5 போலீஸ் ஸ்டேஷன்களில் அறிக்கையாக வழங்க வேண்டும்,'' என்றார்.
கெங்கவல்லி தாசில்தார் நாகலட்சுமி, தேர்தல் அலுவலர்கள், போலீசார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement