மாட்டுப்பொங்கலுக்கு பயன்படுத்தும் அலங்கார பொருட்கள் விற்பனை 'ஜோர்'

கிருஷ்ணகிரி: தைப்பொங்கலை கொண்டாடி வரும் தமிழர்கள், தை, 2ம் நாளான இன்று மாட்டுப்பொங்கலில், விவசாயத்திற்காக உழைத்த மாடுகளை மரியாதை செய்யும் வகையில், அவற்றை வழிபடுவது வழக்கம். மேலும் மாடுகளை குளிப்பாட்டி, குங்குமம் வைத்து, மாடுகளின் கழுத்து, கொம்புகளில் புதிய கயிறு, மணி மற்றும் கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி விவசாயிகள் வழிபடுவர்.

இந்நிலையில், மாடுகளுக்கு தேவையான கயிறு, மணிகள் போன்றவை கிருஷ்ணகிரி ஐந்து ரோடு ரவுண்டானா பகுதிகளில் உள்ள கடைகளில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றை வாங்க விவசாயிகள் நேற்று அதிகளவில் வந்தனர். அதேபோல போச்சம்பள்ளி, பர்கூர், காவேரிப்பட்டணம் பகுதியிலும், மாட்டிற்கான அலங்கார பொருட்கள் விற்பனை களைகட்டியது.

* பொங்கல் திருநாளையொட்டி, ஊத்தங்கரை நகர பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. பலர் பொங்கல் படைக்க வேண்டிய பொருட்களான பானை, செங்கரும்பு மற்றும் புத்தாடைகள் வாங்க கடைவீதியில் குவிந்தனர். ஊத்தங்கரை அரசமர பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

* பாப்பிரெட்டிப்பட்டி அருகே, பொம்மிடியில் வட்டாரத்தில் மாட்டு பொங்கலையொட்டி, பொங்க பானைகள், வண்ண கயிறுகள், அலங்கார பொருட்கள் விற்பனை ஜோராக நடந்தது.

Advertisement