மாட்டு வண்டி ஓட்டிய குழந்தை தொழிலாளி மீட்பு

ஈரோடு: ஈரோட்டில் பார்க் சாலை, சடையப்பா சாலையில், பார்சல் ஏற்றி, இறக்கும் பணியில் குழந்தை தொழிலாளர் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ஜெயலட்சுமி தலைமையில், ஈரோடு குழந்தை தொழிலாளர் தடுப்பு படை குழுவினர், ஆய்வு செய்தனர்.

அங்கு மாட்டு வண்டி ஓட்டும் பணியில் இருந்த, 14 வயது சிறுவன் மீட்கப்பட்டு, மாவட்ட குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை பணிக்கு அமர்த்திய உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement