இளம் இந்தியா அசத்தல்: 'உலக' பயிற்சி ஆட்டத்தில்
புலவாயோ: ஜூனியர் உலக கோப்பை பயிற்சி ஆட்டத்தில் அசத்திய இந்திய அணி 121 ரன் வித்தியாசத்தில் ஸ்காட்லாந்தை வீழ்த்தியது.
ஜிம்பாப்வே, நமீபியாவில் (ஜன. 15 - பிப். 6), 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) 16வது சீசன் நடக்கவுள்ளது. இந்தியா, 'நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கு தயாராகும் வகையில், ஒவ்வொரு அணியும் பயிற்சி போட்டியில் விளையாடுகின்றன.
ஜிம்பாப்வேயின் புலவாயோவில் நடந்த பயிற்சி போட்டியில் இந்தியா, ஸ்காட்லாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஸ்காட்லாந்து அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
இந்திய அணிக்கு கேப்டன் ஆயுஷ் மாத்ரே (22) சுமாரான துவக்கம் கொடுத்தார். மறுமுனையில் அசத்திய வைபவ் சூர்யவன்ஷி, 50 பந்தில் 96 ரன் (7x6, 9x4) விளாசினார்.
ஆரோன் ஜார்ஜ் (61), விஹான் மல்ஹோத்ரா (77), அபிக்யான் (55) அரைசதம் கடந்தனர். ஒல்லி ஜோன்ஸ் 'வேகத்தில்' கனிஷ்க் சவுகான் (3), முகமது எனான் (9) வெளியேறினர்.
இந்திய அணி 50 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 374 ரன் எடுத்தது. அம்ப்ரிஷ் (28), தீபேஷ் (10) அவுட்டாகாமல் இருந்தனர்.
பின் மழை குறுக்கிட, ஸ்காட்லாந்து வெற்றிக்கு 24 ஓவரில், 234 ரன் என 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் இலக்கு மாற்றப்பட்டது. ஸ்காட்லாந்து அணி 24 ஓவரில், 112/9 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. இந்தியா சார்பில் தீபேஷ், கிலான் படேல் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.
மேலும்
-
சிரியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்: ஐஎஸ் பயங்கரவாதிகள் முகாம்கள் அழிப்பு
-
சோம்நாத் கோவிலில் பிரதமர் மோடி சிறப்பு வழிபாடு
-
ஆபாச உள்ளடக்க விவகாரத்தில் தவறை ஒப்புக் கொண்டது க்ரோக்: 600 கணக்குகள் நீக்கியது
-
நோபல் பரிசை வேறொருவரிடம் பகிர முடியாது: வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் கருத்துக்கு எதிர்ப்பு
-
தொடர் போராட்டத்தால் பதற்றம்; ஈரான் விடுதலைக்கு உதவ தயார் என்கிறார் அதிபர் டிரம்ப்
-
கர்நாடக சங்கீதம் கேளுங்கள் சந்தோஷம் பெறுங்கள்: இசைக் கலைஞர் உமாகுமார்