கமேனிக்கு எதிரான போராட்டம்; தீவிரப்படுத்த ஈரான் இளவரசர் அழைப்பு

2


டெஹ்ரான்: ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும்படி, வெளிநாட்டில் வசித்து வரும் அந்நாட்டு இளவரசர் ரெசா பஹ்லவி அழைப்பு விடுத்துள்ளார்.

மேற்காசிய நாடான ஈரானில், 1979ல் ஏற்பட்ட கிளர்ச்சியால், அப்போதைய மன்னராட்சி முடிவுக்கு வந்தது. இதையடுத்து, இஸ்லாமிய குடியரசு ஆட்சி பொறுப்பை ஏற்றது. அந்நாட்டு மன்னர் முகமது ரெசாஷா பஹ்லவி வெளிநாட்டில் தஞ்சமடைந்தார். அந்நேரம், இளவரசர் ரெசா பஹ்லவி விமானப்படை பயிற்சிக்காக அமெரிக்கா சென்றிருந்ததால், அவரால் நாடு திரும்ப முடியவில்லை. 40 ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்காவில் அவர் வசித்து வருகிறார்.



இந்நிலையில், தற்போது ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டு அரசுக்கு எதிராக, கடந்த டிச., 28 முதல் மக்கள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தில், 65 பேர் உயிரிழந்துள்ளனர். 2,300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இணைய சேவை முடக்கப்பட்டுள்ள தால், முழுமையான பலி எண்ணிக்கை என்ன என்பது தெரியவில்லை.


இதையடுத்து, அமெரிக்காவில் வசிக்கும் இளவரசர் பஹ்லவி, ஈரான் அரசுக்கு எதிரான போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும்படியும், முக்கிய நகரங்களை கைப் பற்றும்படியும் போராட்டக் காரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அரசு அலுவலகங்கள், வானொலி, டிவி நிலையங்கள் அமைந்துள்ள நகரின் முக்கிய பகுதிகளை கட்டுக்குள் கொண்டு வந்தால், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தலாம் என, அவர் கருதுகிறார்.

@block_Y@

கமேனியின் படத்தை எரித்து சிகரெட் பற்ற வைத்த பெண்

ஈரானில் கடுமையான மதக் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. சில ஆண்டுகளுக்கு முன், பொது வெளியில் ஹிஜாப் எனும் முகத்தை மறைக்கும் துணியை அணியாததால், மாசா அமினி என்ற இளம்பெண், அந்நாட்டு பாதுகாவலர்களால் கைது செய்யப்பட்ட நிலையில், சில மணி நேரங்களில் உயிரிழந்தார்.


இது உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவ்வளவு கட்டுப்பாடுகள் இருக்கும் ஈரானில், தற்போது இளம்பெண்கள் பொது வெளியில் ஈரான் உயர் தலைவர் கமேனியின் புகைப்படத்தை எரித்து, அந்த நெருப்பில் சிகரெட் பற்ற வைக்கும் நிகழ்வுகள் நடக்கின்றன. ஹிஜாப்பை கழற்றி எறிந்தும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. block_Y

Advertisement