வெனிசுலா கச்சா எண்ணெயை வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி

8

வாஷிங்டன்: வெனிசுலாவின் கச்சா எண்ணெயை வாங்க, இந்தியாவுக்கு அனுமதி அளிக்க தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தென் அமெரிக்க நாடான வெனிசுலா அதிபராக இருந்த நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி சிலியா ஆகியோரை ராணுவ நடவடிக்கை வாயிலாக அமெரிக்கா கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அந்நாட்டின் கச்சா எண்ணெயை உலக சந்தைகளில் விற்கவும், அங்குள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை மறுசீரமைக்கவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு வெனிசுலாவின் கச்சா எண்ணெயை விற்க அனுமதி அளிக்கப்படும் என, அமெரிக்கா தெரிவித்த நிலையில், இந்திய எண்ணெய் நிறுவனங்களும் வாங்க ஆர்வம் காட்டின.

இந்நிலையில், அமெரிக்க அரசின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வெனிசுலாவின் கச்சா எண்ணெயை வாங்க இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அனுமதி அளிக்க தயாராக உள்ளோம். இந்த விற்பனை எங்களின் வழிகாட்டுதலின்படி நடக்கும்' என்றார்.

Advertisement