காசா அமைதி படைக்கு ராணுவத்தினரை அனுப்புகிறது வங்கதேசம்
டாக்கா: காசா அமைதி படைக்கு ராணுவ வீரர்களை அனுப்ப வங்கதேசம் விருப்பம் தெரிவித்துள்ளது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், 2024ல், மாணவர்களின் போராட்டத்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்து, ஷேக் ஹசீனா நம் நாட்டுக்கு தப்பி வந்தார்.
இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்றது. அங்கு, அடுத்த மாதம் பொதுத் தேர்தல் நடக்கிறது.
நம் நாட்டுக்கு எதிரான மனநிலையை கொண்ட முகமது யூனுஸ், சீனா மற்றும் பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வருகிறார்.
இந்நிலையில், பாலஸ்தீனத்தின் காசாவுக்கு அமெரிக்கா அனுப்ப உள்ள அமைதி படையில், பாகிஸ்தானை பின்பற்றி தங்களது ராணுவ வீரர்களையும் அனுப்ப தயாராக இருப்பதாக, வங்கதேச தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கலிலுார் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வாஷிங்டனில் அந்நாட்டு வெளியுறவு அதிகாரிகளை சந்தித்து பேசிய அவர், இதை தெரிவித்தார். இக்கூட்டத்தில், வங்கதேச பொதுத்தேர்தல், இருதரப்பு வர்த்தகம் குறித்து விவாதித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும்
-
திருமண ஹோமம், ஆண்டாள் திருக்கல்யாணம்
-
டில்லியில் டிஜிட்டல் அரெஸ்டில் ரூ.15 கோடி இழந்த டாக்டர் தம்பதி
-
சிரியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்: ஐஎஸ் பயங்கரவாதிகள் முகாம்கள் அழிப்பு
-
இந்தியாவின் வலிமையை காட்டும் சோம்நாத் கோவில் கொடி: பிரதமர் மோடி பெருமிதம்
-
ஆபாச உள்ளடக்க விவகாரத்தில் தவறை ஒப்புக் கொண்டது க்ரோக்: 600 கணக்குகள் நீக்கியது
-
நோபல் பரிசை வேறொருவரிடம் பகிர முடியாது: வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் கருத்துக்கு எதிர்ப்பு