3586 கிலோ கழிவுகள்

மதுரை: மதுரையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் இ-வேஸ்ட் சேகரிப்பு முகாம் நடந்தது.


வாரியத்தின் சுற்றுச்சூழல் பொறியாளர் குணசீலன் தலைமை வகித்தார். உதவி பொறியாளர்கள் உதயா, கிருஷ்ணபிரசாந்த், மடீட்சியா தலைவர் செந்திக்குமார் கலந்து கொண்டனர். கல்வி நிறுவனங்கள், அலுவலகங்கள், தனியாரிடமிருந்து சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் மின்னணுக் கழிவுகள் 3586 கிலோ அளவிற்கு பெறப்பட்டது.

Advertisement