அரசு பணிக்கு தேர்வானவர்களுக்கு பாராட்டு

திருமங்கலம்: திருமங்கலம் இறையன்பு நுாலகத்தில் படித்து குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று அரசுப் பணிக்கான உத்தரவு கடிதத்தை பெற்ற அக்சயா, அருணா தேவி, மாரிமுத்து, பால்பாண்டி ஆகியோருக்கு இறையன்பு நுாலகத்தில் பாராட்டு விழா நடந்தது.

நிர்வாக அறங்காவலர் பார்த்தசாரதி வர வேற்றார். அறங்காவலர் சங்கரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் பாப்புராஜ், சார்லஸ் முன்னிலை வகித்தனர்.

புலவர் சங்கரலிங்கம் வாழ்த்தி பேசினார். ஓய்வு பெற்ற நுாலக அலுவலர் இளங்கோ, நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அறங்காவலர் சக்கையா நன்றி கூறினார். அறங்காவலர் சுபா அபிராமி, மேற்பார்வையாளர் ஆமினா பேகம் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Advertisement