காஞ்சி சங்கரா கலை கல்லுாரியுடன் எல்.எஸ்.சி., புரிந்துணர்வு ஒப்பந்தம்

காஞ்சிபுரம்: மாணவர்களின் வேலை வாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில், திறன் மேம்பாட்டுக்காக காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியுடன், எல்.எஸ்.சி., எனப்படும் லாஜிஸ்டிக் செக்டார் ஸ்கில் கவுன்சில்' இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாண வர்களின் படிப்புடன் இணைந்து, வேலை வாய்ப்புகளை உறுதி செய்வதற்கான திறன் மேம்பாட்டு க்காக தொடர்ந்து பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கல்லுாரி மேலாண்மை துறை மாணவர்கள் பயன்பெறும் வகையில், என்.எஸ்.டி.சி., எனப்படும் நேஷனல் ஸ்கில் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் அங்கீகரித்த எல்.எஸ்.சி., எனப்படும் லாஜிஸ்டிக் செக்டார் ஸ்கில் கவுன்சில்', உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

எல்.எஸ்.சி., நிறுவனத்தின் சார்பில் அதன் தலைமை நிலை அதிகாரி ரவிகாந்த் கையொப்பம் இட்டார்.

இந்த திறன் கல்வியானது வரும் கல்வியாண்டு முதல் மாணவர்கள் பயி ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் லாஜிஸ்டிக், இ-- காமர்ஸ் போன்ற பிரிவுகளில் வேலை வாய்ப்புகளை உறுதி செய்வதற்கான வாய்ப்பாக அமையும் என, கல்லுாரி முதல்வர் கலைராம வெங்கடேசன் தெரிவித்தார்.

Advertisement