கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமத்துவ பொங்கல்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஒன்றியம் காட்டிநாயனப்பள்ளி, 'லிட்டில் ஹாட்ஸ்' மனநல காப்பகம், கிருஷ்ணகிரி நகராட்சி, பழைய அரசு மருத்துவமனை மருத்துவ கல்லுாரி வளாகத்திலுள்ள மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான அவசர சிகிச்சை மையம், ஆகிய இடங்களில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. இதை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார்.
இதில் கோலப்போட்டி, உரி அடித்தல், கயிறு இழுத்தல், இசை நாற்காலி ஆகியவை நடந்தது. தொடர்ந்து புதுபானை வைத்து, பொங்கல் வைத்து, சூரிய பகவானை வழிபட்டனர். இதில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, கலெக்டர் தினேஷ்குமார் பரிசுகளை வழங்கினார்.
தொடர்ந்து, மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான அவசர சிகிச்சை மீட்பு மையத்தில், 6 மாதங்கள் சிகிச்சை பெற்று குணமடைந்த, உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த போலக்குமார், 28, என்பவரை, அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.
இதில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் கவிதா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் மகாதேவன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் முருகேசன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும்
-
அழிப்போரை விட உருவாக்குவோருக்கே வலிமை அதிகம்: அமித் ஷா
-
டில்லி எதிர்க்கட்சி தலைவர் ஆதிஷி சிங் 19க்குள் விளக்கம் அளிக்க உத்தரவு
-
குளிர் அலை தணிந்து வெப்பநிலை அதிகரிப்பு: டில்லி மக்கள் நிம்மதி பெருமூச்சு
-
அடுத்தடுத்து விழும் தடையால் த.வெ.க., விஜய் 'அப்செட்'
-
பா.ஜ.,வின் புதிய தேசிய தலைவர் யார்?: வரும் 20ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
-
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்: பிரிட்டன் பார்லி., கண்டனம்