மாநாட்டில் இறந்தவரின் குடும்பத்துக்கு நிவாரணம்
விருத்தாசலம்: தே.மு.தி.க., மாநாட்டில் இறந்த கூலித்தொழிலாளி குடும்பத்துக்கு, அக்கட்சி சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டது.
அரியலுார் மாவட்டம், ஆண்டிமடம் அடுத்த தாவடநல்லுார் பாண்டுரங்கன் மகன் செல்வராஜ், 38; கூலி தொழிலாளி.
திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் வேப்பூர் அடுத்த பாசாரில் நடந்த தே.மு.தி.க., மக்கள் உரிமை மீட்பு மாநாட்டில் பங்கேற்க வந்திருந்தார்.
இரவு 7:00 மணியளவில், திடீரென மயங்கி விழுந்த செல்வராஜை, அங்கிருந்தவர்கள் மீட்டு, வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அவரது சடலம், பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், அக்கட்சியின் மாநில பொருளாளர் சுதீஷ், நேற்று காலை 11:00 மணியளவில், செல்வராஜ் சடலத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி விட்டு, அவரது குடும்பத்துக்கு 1 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கினார். மாவட்ட செயலாளர்கள் சிவக்கொழுந்து, உமாநாத், துணை செயலாளர் வேல்முருகன் உடனிருந்தனர்.
மேலும்
-
கூடங்குளத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்!
-
சூதாட்ட இணையதள பக்கங்கள் முடக்கம்; மத்திய அரசு அதிரடி
-
எதிர்க்கட்சிகளின் பிளவுபடுத்தும் அரசியலை முறியடித்த மும்பை மக்கள்: அண்ணாமலை
-
வளர்ச்சி, தொலைநோக்குப் பார்வையின் தாக்கமே மஹா. உள்ளாட்சித் தேர்தல் வெற்றி; பிரதமர் மோடி வாழ்த்து
-
ஈரான் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கிறோம்; மத்திய அரசு
-
பாஜ ஆளும் மாநிலங்களில் வங்கமொழி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள் சித்ரவதை: மம்தா குற்றச்சாட்டு