எலும்புக்கூடாக மாறிய மின்கம்பத்தால் அச்சம்

கும்மிடிப்பூண்டி: ஆரம்பாக்கம் அணுகுசாலையில் மின்கம்பத்தின் கான்கிரீட் பூச்சு பெயர்ந்து, எலும்புக்கூடாக மாறியுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் விபத்து அச்சத்தில் தவித்து வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில், சென்னை -- கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இப்பகுதி அணுகுசாலையில் உள்ள மசூதி அருகே மின்கம்பம் சேதமடைந்து, கான்கிரீட் பூச்சு பெயர்ந்து, எலும்புக்கூடாக மாறியுள்ளது. இதனால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர்.

மேலும், ஆரம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களிலும், மின்வாரிய அதிகாரிகள், மின்கம்பங்கள் முறையாக பராமரிக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

எனவே, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் உடனே நடவடிக்கை எடுத்து, சேதமடைந்த கம்பம் மற்றும் மின்கம்பிகளை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement