கடும் நெருக்கடியில் முந்திரி தொழில் மத்திய அரசு தீர்வு காண கோரிக்கை
பண்ருட்டி: முந்திரி தொழில் கடும் நெருக்கடியில் உள்ளதால் மத்திய அரசு பிரச்சனைக்கு தீர்வு காண கோரிக்கை எழுந்துள்ளது.
அகில இந்திய முந்திரி சங்கம் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் அறிக்கை:
தற்போது இந்திய முந்திரி தொழில் மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது. மூல முந்திரி கொட்டைகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஆனால் இந்திய உள்நாட்டு சந்தையில் முந்திரி பருப்பின் தேவை மந்தமாக உள்ளது. இதனால் இந்திய முந்திரி செயலாக்கத் தொழில் உற்பத்தி கடுமையாக பாதித்துள்ளது.
இந்த நிலைக்கு முக்கிய காரணம். முந்திரி பருப்பு சட்ட விரோதமாக இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்படுவது தான். இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் முந்திரி பருப்பு விலங்கு தீவனம், முந்திரி ஒடு, முந்திரி உமி என்கிற பெயரில் ஜி.எஸ்.டி.எச்.எஸ்.என். கோடு தவறாக அறிவித்து கொண்டு வரப்படுகிறது.
மேலும், சாதாரண முந்திரி பருப்பை வறுத்த முந்திரி என்று தவறாக குறிப்பிடுவதன் மூலமும், சிறப்பு பொருளாதார மண்டலம் அலகுகள் வழியாகவும் இந்த சட்டவிரோத இறக்குமதிகள் நடைபெறுகிறது. இன்றைய நிலையில் இந்திய முந்திரி தொழில் முழுமையாக உள்நாட்டு சந்தையை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகிறது. ஆனால் அந்த சந்தை தற்போது வியட்நாம் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் முந்திரி பருப்பால் நிரம்பி வருகிறது.
இந்த முந்திரி பருப்புகள் விலை குறைவானவை மட்டுமல்ல. தரத்திலும் இந்திய முந்திரி பருப்புகளுடன் ஒப்பிடுகையில் குறைவானவை. மிக முக்கியமாக, இந்த குறைந்த தரமுடைய முந்திரி பருப்புகள் 'இந்திய முந்திரி' என்ற பெயரில் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் நுகர்வோர் தரமான இந்திய முந்திரி வாங்குகிறோம் என்ற நம்பிக்கையில் ஏமாற்றப்படுகின்றனர்.
நுகர்வோரின் உணவு பாதுகாப்பு மற்றும் நலன் பாதிக்கிறது. இந்திய முந்திரி பருப்பின் நம்பகத்தன்மை, அதன் மதிப்பு சந்தையில் கடுமையாக பாதிக்கிறது.
இந்த நிலை தொடர்ந்தால், இந்திய முந்திரி தொழில் மேலும் வீழ்ச்சியடையும் என்பது உறுதி. அதன் விளைவாக, 10 லட்சம் பெண்கள் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் நேரடியாக பாதிக்கும் . முந்திரி செயலாக்கத் துறையில் பெண்கள் முதுகெலும்பாக உள்ளனர்.
அதனால், மத்திய அரசு உடனடியாகவும் கடுமையாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குறிப்பாக எச்.எஸ்.என்.கோடு அறிவிப்புகளில் கடுமையான கண்காணிப்பு, துறைமுகங்கள் மற்றும் சுங்கத்துறையில் தீவிர சோதனைகள், சிறப்பு பொருளாதார மண்டலம் வழியாக ரோஸ்டட் கேஷ்யூஸ் என தவறாக குறிப்பிடுவதன் மூலம் நடைபெறும் தவறான இறக்குமதிகளை முழுமையாக தடுக்க வேண்டும்.
நுகர்வோர் பாதுகாப்பு நடவடிக்கைகள், இந்திய முந்திரி தொழிலை பாதுகாக்கும் நியாயமான வர்த்தக நடைமுறைகள் எடுக்க வேண்டும். இல்லையெனில் இந்தியாவின் மிக முக்கியமான வேலைவாய்ப்பு வழங்கும் வேளாண் சார்ந்த தொழில்களில் ஒன்றான முந்திரி தொழில் திரும்ப பெற முடியாத பாதிப்பை சந்திக்கும் .
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
கூடங்குளத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்!
-
சூதாட்ட இணையதள பக்கங்கள் முடக்கம்; மத்திய அரசு அதிரடி
-
எதிர்க்கட்சிகளின் பிளவுபடுத்தும் அரசியலை முறியடித்த மும்பை மக்கள்: அண்ணாமலை
-
வளர்ச்சி, தொலைநோக்குப் பார்வையின் தாக்கமே மஹா. உள்ளாட்சித் தேர்தல் வெற்றி; பிரதமர் மோடி வாழ்த்து
-
ஈரான் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்கிறோம்; மத்திய அரசு
-
பாஜ ஆளும் மாநிலங்களில் வங்கமொழி பேசும் புலம்பெயர் தொழிலாளர்கள் சித்ரவதை: மம்தா குற்றச்சாட்டு