குறைகேட்பு கூட்டமே குறையாகலாமா?

திருப்பூர்: கலெக்டர் தலைமையில், பதிவு பெற்ற தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடன், காலாண்டு குறைகேட்பு கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், அங்கீகரிக்கப்பட்ட நுகர்வோர் அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்ற காலாண்டு கூட்டம் நடத்தப்பட்டது.

இதில், கலெக்டர் பங்கேற்காத நிலையில், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன் தலைமையில் கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டது. இருப்பினும், குறிப்பிட்ட நேரத்தில் கூட்டம் துவங்காமல், ஒரு மணி நேரம் தாமதமாக கூட்டம் துவங்கியதால், கூட்டத்துக்கு வந்திருந்த நுகர்வோர் அமைப்பினர் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

கூட்டத்தில் பங்கேற்ற பல துறைகளை சேர்ந்த மாவட்ட அதிகாரிகள், அரசு மருத்துக்கல்லுாரி மருத்துவமனை அதிகாரி, திருப்பூர் மாநகராட்சி உதவி கமிஷனர்கள், வட் டார போக்குவரத்து அலுவலர் உட்பட அதிகாரிகளும் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழலும் ஏற்பட்டது.

திருமுருகன்பூண்டி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் காதர் பாஷா கூறுகையில், ''மாவட்ட நிர்வாகத்தின் மக்கள் நலன் சார்ந்த சேவை தொய்வில் லாமல் தொடர வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் நோக்கில் தான் இத்தகைய கூட்டம் நடத்தப்படுகிறது.

அதிலும், மூத்த நுகர்வோர் அமைப்பின் நிர்வாகிகளுக்கு, கருத்துக்களை முன்வைக்கவும், இந்த கூட்டத்தில் வாய்ப்பளிக்கப்படவில்லை. இது, அலுவலக நடைமுறைக்கு முரணாகவே இருந்தது'' என்றார்.

Advertisement