வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்: பிரிட்டன் பார்லி., கண்டனம்

1

லண்டன்: வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மற்றும் பிற மத சிறுபான்மையினர் கொல்லப்படுவது குறித்து பிரிட்டன் பார்லிமென்டில் கேள்வி எழுப்பிய எதிர்க்கட்சியினர், அந்நாட்டில் நடக்கும் அனைத்து வன்முறை செயல்களையும் வன்மையாக கண்டித்தனர்.

நம் அண்டை நாடான வங்கதேசத்தில் சமீபகாலமாக ஹிந்துக்கள் உட்பட சிறுபான்மையினர் மீது தொடர் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அங்கு விரைவில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது.


அத்துமீறல்



இந்நிலையில் ஐரோப்பிய நாடான பிரிட்டன் பார்லிமென்டில் எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் எம்.பி.,யும் பிரிட்டிஷ் ஹிந்துக்களுக்கான அனைத்து கட்சி பார்லி., குழுவின் தலைவருமான பாப் பிளாக்மேன், நேற்று உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உட்பட சிறுபான்மையினர் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. பலர் கொல்லப்பட்டுள்ளதுடன், அவர்களின் உடைமைகள் மற்றும் வழிபாட்டு தலங்களும் சேதப்படுத்தப்பட் டுள்ளன. இத்தகைய அத்து மீறல் சம்பவங்களால், திடுக்கிட்டுள்ளேன்.

இந்நிலையில் விரைவில் அங்கு பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் என கூறப்பட்டாலும், வங்கதேசத்தின் முக்கிய அரசியல் கட்சியான அவாமி லீக், கருத்துக்கணிப்புகளில் 30 சதவீத ஆதரவைப் பெற்றிருந்தாலும், இத்தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் முஸ்லிம் பயங்கரவாதிகள், ஒரு பொது ஓட்டெடுப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இது, வங்கதேசத்தின் அரசியலமைப்பை மாற்றிவிடும்.

அந்நாட்டில், சிறுபான்மையினர் பாதுகாப்பையும் அனைவரையும் உள்ளடக்கிய தேர்தல் நடைபெறுவதை பிரிட்டன் அரசு உறுதிப்படுத்த வேண்டும். இதுகுறித்து பிரிட்டன் அரசு தன் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


ஆதரவு



இதைத்தொடர்ந்து பிரிட்டன் அரசு சார்பில் பார்லிமென்ட் தலைவர் ஆலன் கேம்ப்பெல் கூறுகையில், “மனித உரிமைகளை மேம்படுத்தவும் பாதுகாக்கவும் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்; இந்த விஷயத்தை வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
“மத அடிப்படை அல்லது இன அடிப்படை என அனைத்து வன்முறைச் செயல்களையும் நாங்கள் கண்டிக்கிறோம். மேலும், அமைதியான மற்றும் நம்பகமான தேர்தல்களுக்கு அந்நாட்டின் இடைக்கால அரசுக்கு ஆதரவளிக்கிறோம். இதுபற்றி வெளியுறவு செயலர் யெவெட் கூப்பரின் கவனத்திற்கு எடுத்துச்செல்லப்படும்,” என்றார்.

Advertisement